Motivational Story in Tamil - ஒரு நோஞ்சான் ஆடு

"இந்த உலகம் என்னை பலவீனமான ஒரு நபராகப் பார்க்கிறது" என்று நீங்கள் வருந்திக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள். இதன் மூலமாக, உங்களது மனநிலை நிச்சயம் மாறும்.


 
ஒரு பட்டியிலிருந்த ஆடு, நான்கு குட்டிகள் போட்டது. அதில் மூன்று குட்டிகள் கொழுகொழுவென்றும், ஒன்று மட்டும் நோஞ்சானாகவும் வளர்ந்தது வந்தன. பட்டியின் சொந்தக்காரர் அந்த நோஞ்சான் ஆட்டுக்கு என்னதான் நிறைய தீவனத்தைக் கொடுத்தாலும், அது கொஞ்சம் கூட எடை கூடவேயில்லை. 

ஆகவே, அதற்கு தீவனம் தருவதை அவர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார். அதைப் பார்த்தாலே, எரிச்சலோடும் கோபத்தோடும் நடந்து நடந்து கொண்டார். ஆனால், அந்த நோஞ்சான் ஆடு எதைக்கண்டும் பெரிதும் வருந்தியதில்லை. தனக்குக் கிடைத்த தீவனத்தைத் தின்று, நன்றாகப் புள் மேய்ந்து வளர்ந்து கொண்டிருந்தது. அதன் பலம் முழுவதும் அதன் எலும்பிலேயே இருந்தது. அது யாருக்குத் தெரிந்ததோ இல்லையோ, அந்த ஆட்டுக்கு நன்றாகத் தெரியும்.

இப்படியிருக்கும்போது ஒருநாள் அந்த ஆடுகள் எல்லாம் புல் மேயச்சென்றபோது, ஒரு ஓநாய் அவைகளைத் தாக்க வந்தது. ஆடுகளெல்லாம் பயந்து ஒதுங்கி ஓட ஆரம்பித்தன. ஆனால், ஒரு குட்டி ஆடு மட்டும் ஒரு புதருக்குள் மாட்டிக்கொண்டது. 

மற்ற ஆடுகளெல்லாம் பதறியடித்துக் கொண்டு  சிதறி ஓட, அந்த நோஞ்சான் ஆடு மட்டும் அந்தக் குட்டி ஆட்டுக்கு அருகே சென்றது. ஒநாயைப் பார்த்து முறைத்தது. தாக்க வந்த ஓநாயை முட்டித் தள்ளியது. அதற்குத் தான் எலும்பில் பலம் அதிகமாயிற்றே !! ஆடு முட்டியதில் குழம்பிப்போனது ஓநாய். அந்த ஆட்டுக்கு பயந்து வந்த வழியே ஓடியும் போனது.

குட்டி ஆட்டை நோக்கிப் பதறி வந்த பட்டிக்காரர் அந்த நோஞ்சான் ஆட்டைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்றார்.

இப்படித் தான் மக்களே !! இந்த உலகம் உங்களை நோஞ்சானாகப் பார்க்கலாம். பலவீனமுள்ள ஒரு நபராகப் பார்க்கலாம். முட்டாளாக, திறமையற்ற ஒரு நபராகக் கூடப் பார்க்கலாம். ஆனால், அந்த ஆடு தன்னை முழுவதுமாக நம்பி கவலையற்று வாழ்ந்த அந்த ஆட்டைப் போல, நமது வேலையில் மட்டும் கண்ணாக இருக்க வேண்டும். 

எப்படி, இனி உங்கள் உருவத்தைப் பற்றி இனி கவலைப் படுவீர்களா என்ன !!

Check these stories also from APPLEBOX

உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள் 

தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil

தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள் 

பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் யாரையாவது நம்பி ஏமாறும் பெரு நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள் 

ட்ரோஜன் குதிரை கதை - Trojan Horse Story - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் உங்கள் குறிக்கோளை அடைய நிறைய தடைகளை சந்தித்தால், இந்தக் கதையைக் கேளுங்கள் 

பலூன் கதை - Balloon - An interesting Motivational Story in Tamil

அடுத்தவர்கள் உங்கள் பலவீனத்தைக் கண்டு ஏளனம் செய்தால், இந்தக் கதை உங்களுக்கானது 

ஒரு நோஞ்சான் ஆடு - A Skinny Goat - An interesting Motivational Story in Tamil

This section in APPLEBOX is exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.

In YOUTUBE, you can search for Applebox Motivational Stories, Kutty Stories Applebox and Kutty Kadhai Applebox. Both my channel and website has a good collection of motivational stories in Tamil. Those Stories include Stories of
Successful People in Tamil
Motivational Video in Tamil for Students
Motivational Video in Tamil for College Student
Moral Stories in Tamil and Kutty Stories.

To watch this as a video, please click the PLAY BUTTON below



Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post