1. காபூலிவாலா சிறுகதை - KABULIWALA Story in Tamil
சிறு குழந்தையான மினிக்கு ஒரு வீதி வியாபாரியோடு நட்பு ஏற்படுகிறது. "காபூலிவாலா, காபூலிவாலா" என்று அவரை அழைத்துவந்த மினியை தீவிரமாகக் கண்காணித்தார் அவள் அப்பா. ஒருநாள், உணர்ச்சிவசத்தால் காபூலிவாலா ஒரு தவறு செய்ய, அவரும் மினியும் நிரந்தரமாகப் பிரிகிறார்கள். அவர்கள் மீண்டும் சந்தித்தார்களா ? என்பது தான் CLIMAX.
பத்து நிமிடங்களுக்கு இந்தக் கதை உங்களை மேற்கு வங்காளத்திற்கே அழைத்துச் செல்லும். This is a Rabindranath Tagore Story in Tamil. If you are looking for Kabuliwala Summary in Tamil, you are at the right place.
2. மான்பஞ்சன் சிறுகதை - MAANBHANJAN Story in Tamil
மனைவியை ஏமாற்றி இன்னொரு பெண்ணுடன் பழகும் கணவன் கோபிநாத். அவனது துரோகம் தெரியாமல் அப்பாவித்தனமாக இருக்கும் மனைவி கிரிபாலா. கோபிநாத் ஒருநாள் தனது காதலியான லபோங்காவுடன் வேறு ஊருக்கு ஓடிப்போக, கிரிபாலாவின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதைச் சொல்லும் கதை தான் இந்த 'மான்பஞ்சன்'.
சில நிமிடங்கள் 1800-களின் நாடக அரங்குகளை இந்தக் கதை உங்களை அழைத்துச் செல்லும். This is a Rabindranath Tagore Story in Tamil. If you are looking for Maanbhanjan Summary in Tamil, you are at the right place.
3. அபராஜிதா சிறுகதை - APARAJITHA Story in Tamil
கொல்கத்தாவிலிருந்து ரயிலில் பிரயாணம் செய்யும் அனுபம். அதே வண்டியில் இரண்டு சிறுமிகளுடன் ஏறும் கல்யாணி. அவர்கள் இருவரும் பேசிக்கொள்ள, ஒரு ரகசியம் உடைகிறது. கடந்த காலத்தில், இதே அனுபமால் தன வாழ்க்கையின் திசையை மாற்றிக்கொண்ட கல்யாணி, மறுபடியும் அவனை ஏற்றுகொண்டாளா ? என்பது CLIMAX.
சுதந்திரமடையாத இந்தியாவிலிருந்து ரயில் வண்டியில் சில மணி நேரங்கள் பிரயாணம் செய்த அனுபவத்தை இந்தக் கதை உங்களுக்குத் தந்துவிடும். This is a Rabindranath Tagore Story in Tamil. If you are looking for Aparajitha Summary in Tamil, you are at the right place.
தனது எஜமானுக்கு ஒரு விசுவாசமான வேலைக்காரன் இந்த ராய் சரண். எஜமானின் குழந்தையை தனது சின்ன எஜமானாக நினைத்து விளையாடுகிறான். ஆனால், ஒரு நாள் அந்த விபரீதம் நடக்கிறது. ராய் சரணின் வாழ்க்கையும் அவன் எஜமானின் வாழ்க்கையும் புரட்டிப் போடப்படுகிறது. அதன் பின், ராய் சரண் எப்படி அதை சரி செய்கிறான் ? என்பதே மீதி கதை.
இந்தக் கதை உங்களை சில நிமிடங்கள் பதைபதைப்பாக்கும். This is a Rabindranath Tagore Story in Tamil. If you are looking for My Lord The Baby Summary in Tamil, you are at the right place.
பணக்காரக் குடும்பத்தில் பிறக்கும் தேவதாஸ். ஏழைக் குடும்பத்தில் பிறக்கும் பார்வதி. இவர்கள் காதலால் இணைந்தாலும், ஒரு சம்பிரதாயம் இவர்களைப் பிரிக்கிறது. அதன் விளைவாக, வேறு ஒருவருக்கு மனைவியாகிறாள் பார்வதி. அதன் பின் தேவதாஸ் என்ன ஆனான் ? பார்வதி என்ன ஆனாள் ? - இதைச் சொல்லும் கதை தான் இந்த 'தேவதாஸ் பார்வதி' நாவல்.
சில நிமிடங்களுக்கு வலியை உணர வைக்கும் காதல் கதை இது. This is a Sarath Chandra Chattopadhyay Story in Tamil. If you are looking for My Lord The Baby Summary in Tamil, you are at the right place.
Tags:
Tagore Stories