உலக வரலாற்றிலிருந்து காதல் கதைகள் - Love Stories


லைலா மஜ்னு காதல் கதை
அரபு நாட்டைச் சேர்ந்த பணக்கார வணிகரின் மகள் லைலா. அதே நாட்டில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் கயஸ். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. அது கல்லறை வரைக்கும் நீள்கிறது. மனதை உருக்கும் இந்தக் கதையைக் கேட்க, காணொளி இதோ - Laila Majnu Love Story in Tamilரோமியோ ஜூலியட் காதல் கதை
இரு துருவங்கள் போலிருக்கும் குடும்பங்களில் பிறந்தவர்கள் தான், ரோமியோவும் ஜூலியட்டும். ஆரம்பத்தில் வேறொரு பெண்ணை ஒருதலையாகக் காதலிக்கிறான் ரோமியோ. அவளை சந்திப்பதற்காக ஒரு மாறுவேட விருந்தில் கலந்து கொள்ள, அங்கிருந்த ஜூலியெட்டிடம் காதல் மலர்கிறது. பின்னர், குடும்பத்தாரிடம் தப்பிக்க, ஒரு விபரீத காரியத்தைச் செய்கிறார்கள் இந்தக் காதலர்கள். முடிவைத் தெரிந்துகொள்ள, காணொளி இதோ - Romeo and Juliet Love Story in Tamilநெப்போலியன் காதல் கதை 
பிரான்சின் ஹை சொசைட்டி பெண்களின் மீது ஆர்வமுடைய நெப்போலியன், ரோஸ் தாட்சர் என்பவளை ஒரு விருந்தில் சந்திக்கிறான். அவள் மீது காதலும் கொண்டு திருமணமும் செய்து கொள்கிறான். அவள் அவனை விட 10 வயது மூத்தவள். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவள். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். ஆனால், இவையெதுவும் நெப்போலியனின் காதலை மாற்றவில்லை. இப்படிப்பட்ட அவனது அன்புக்கு அவள் பரிசளித்தது துரோகம் மட்டுமே !! முடிவைத் தெரிந்துகொள்ள, காணொளி இதோ - Napolean's Love Story in Tamilஆபிரகாம் லிங்கன் காதல் கதை     
சிறு வயதிலேயே தனது தாயை இழந்த லிங்கன், பருவ வயதில் ரட்லஜ் என்ற பெண் மீது காதல் கொள்கிறார். வறுமையிலும் தனது கரம்பிடித்து நடக்கத் தயாராக இருந்த அவளைத் தன் தாயினிடத்தில் வைத்துப் பார்க்கிறார். ஆனால், வெகு சீக்கிரத்திலேயே அவர்கள் காதல் முடிவுக்கு வருகிறது. லிங்கனை தற்கொலை வரை தள்ளுகிறது. முடிவைத் தெரிந்துகொள்ள, காணொளி இதோ - Abraham Lincoln's Love Story in Tamilஷாஜஹான் மும்தாஜ் காதல் கதை 
வரலாற்றில் காதலுக்கென்று ஆயிரம் சின்னங்கள் இருந்தாலும், அதில் தலையாய சின்னமாகக் கருதப்படுவது தாஜ் மகால் தான். அதற்குப் பின்னிருக்கும் காதல் கதையைக் கேட்காவிட்டால் எப்படி ? கேட்க, காணொளி இதோ - Taj Mahal's Love Story in Tamil


Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post