என்னைப்பற்றி சில வரிகள்

வணக்கம் மக்களே !! நான் உங்க சபரி. ஏற்கனவே, YOUTUBE-ல கதை கேக்குறவங்களுக்கு "APPLEBOX SABARI". இன்னைக்கு இந்த WEBSITE மூலமாத் தெரிஞ்சிக்குறவங்களுக்கு "வெறும் சபரி". 

ஆக, மொத்தத்துல சபரிங்க. என்னோட வலைத்தளம் தான் இது. இப்போ, கொஞ்சம் அடிப்படைத் தகவல்கள பார்க்கலாமா ?

சபரிக்கு எந்த ஊரு 

என்னோட முழு பெயர் சபரி சங்கரி. அப்பாவுக்கு திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை. அம்மாவுக்கு நாகர்கோவில் மீனாட்சிபுரம். அப்பாவோட வேலை காரணமா, ரெண்டு பக்கமும் மாறி மாறி வளர்ந்த ஹைப்பிரிட் குழந்தை நான். 

படிப்பு, வேலை

வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்தேன். மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியில், பொறியியற் படிப்பு. IBM, AT&T Bell Laboratories, L&T என சில பல கம்பெனிகளில் ஆரம்பகால வேலை. இப்போ, மேனிலைப் படிப்பு முடிச்சிட்டு STARTUP கம்பெனிகள்ல ஆராய்ச்சி. இதுதாங்க என்னோட Educational Profile.

வேற personal-ஆ ஏதாச்சும் 

ஆங்ங்.. சொல்ல மறந்துட்டேனே !! இதற்கிடையில, எனக்கு கல்யாணமாகி, எட்டு வயசுல ஒரு பெண் குழந்தையும் இருக்கா. நாங்க இப்போ இருக்குறது - கலிபோர்னியால. 

குடும்பம், வேலை போக மீதி நேரத்துல , இந்த APPLEBOX Channel-அ நடத்திட்டு இருக்கேன். அவ்ளோதான்.

அப்பாடா !! அறிமுகத்தை சுருக்கமா முடிச்சாச்சு..

இவர் எனது கணவர்

இது எனது குழந்தை ரேஷ்மி என்ற மகாலட்சுமி

ஒரு வித்தியாசமான ஆசை 

இப்போ இந்த APPLEBOX ஆரம்பிச்ச கதைய சொல்லவா ?

அது ஒரு பெரிய கதைங்க. அட, இப்புடி சொன்னதும் படிக்கிறத நிறுத்திட்டு ஓடிப் போயிறாதீங்க. கொஞ்சம் சுவாரசியமான கதை தான். ஒரு தடவை படிக்கலாம். 

அதாகப்பட்டது, நம்ம பள்ளிப் பருவ சபரிக்கு தன்னோட பத்து வயசுல இருந்தே எழுத்தாளராகாணும்னு ஆசைங்க. ம்ம்ம்.. ரொம்ப சீக்கிரமாவே வந்த ஆசை தான் இல்ல. ஆனா என்ன செய்யுறது ? இந்த வயசுல தான் இந்த ஆசை வரணும்னு விதிவிலக்கு இருக்கா என்ன ? 

இது தான் பன்னிரண்டு வயது சபரி (2001)

அதனால, அத அப்புடியே விட்டுறாம, அப்பப்போ கவிதை, கதை, கட்டுரைன்னு எழுதி சில பத்திரிக்கைகளுக்கு அனுப்புறதுண்டு. அதுல ஒண்ணு ரெண்டு அத்தி பூத்தாற்போல பிரசுரமானதா நூலகத்துல சொல்லுவாங்க. 

ஆனா, அந்த பேப்பர் கட்டிங்க எல்லாம் சேகரிச்சு நோட்டு போட்டு, நாலு பேர்கிட்ட காட்டி சந்தோஷப்படுற அளவுக்கு, என் நிலைமை அன்னைக்கு இல்லங்க. எங்க குடும்பமே ஒரு பெரிய ரோலர் கோஸ்டர் பயணத்துல போயிட்டு இருந்துது. 'அடுத்த நாள் நம்ம எங்க இருப்போம் ? தொடர்ந்து படிப்போமா, இல்ல படிப்பு பாதிலையே நின்னு போயிருமா ?' - இப்புடி எதுவுமே யூகிக்க முடியாத அந்த பயணத்துல, என்னோட சின்னச் சின்ன வெற்றியையெல்லாம் ரசிக்கிறதுக்கு அன்னைக்கு சூழலும் இடம் தரல.

அதே நேரத்துல. நாலணா அட்டைல பத்திரிக்கைக்கு எழுதி அனுப்புறதையோ, இல்ல பொது நூலகத்துக்குப் போயி புத்தகம் படிக்கிறதையோ நான் நிறுத்துனதும் கிடையாது. 

FM ரேடியோவும் நானும்

இப்படியிருக்கும்போது, எங்க ஊர்ல (திருநெல்வேலி) FM ரேடியோ ஸ்டேஷன் ஒண்ணு ஆரம்பிச்சாங்க. அப்போ நான் பத்தாவது படிச்சிட்டு இருந்தேன். வீட்டுல கேபிள் கனக்ஷன் கிடையாதா, அதனால சும்மா இருக்கும்போதெல்லாம் ரேடியோ தான். மறுபடியும் மறுபடியும் கேட்டு, அவங்க எல்லாரையும் மாதிரி அப்படியே பேச ஆரம்பிச்சேன். புதுசா ப்ரோக்ராம்லாம் கூட டிசைன் பண்ணி வைப்பேன்னா பாத்துக்கோங்களேன். 

அதனால, பத்தாவது பதினோராவது வகுப்பு விடுமுறை சமயத்துல, சில FM ஸ்டேஷன்கள்ல part-time-மா வேலை தேடினேன். அங்க மட்டும் வேலை கிடைச்சா, காலேஜ் சேரும்போது உதவியா இருக்குமேன்னு ஏங்காத நாளே இல்லைங்க. ஆனா, வேலையெல்லாம் கிடைக்கல.

சும்மா sample (2005 to 2016) 

தமிழ் வளர்த்த மதுரை என்னில் வளர்த்த தமிழ் 

கொஞ்சம் ஒழுங்காப் படிச்சதால, மதுரை ஒரு நல் கல்லூரில சீட் தான் கிடைச்சுது. அதுவும் மெரிட்ல. கவர்மெண்ட் சீட் அப்படீங்குறதால, பீஸ் கம்மி . ஆனா அதையுமே, எங்க அப்பா அம்மா ரொம்ப ரொம்ப பாடுபட்டு  தான் கட்டுனாங்க. 

இதையெல்லாம் மனசுல வச்சிட்டு, நான்  கிடைக்கிற நேரத்துல சட்டுன்னு படிச்சிருவேன். பிராக்ட்டிக்கலா படிக்கிறதால, படிச்சதும் மறக்காது. அதனால, எப்பவுமே நிறைய நேரம் மிச்சம் கிடைச்சிது. மதுரைல நிறைய நல்ல மனிதர்களை சந்திக்க, நிறைய புராதான இடங்களை சுற்றிப் பார்க்க வாய்ப்பும் கிடைச்சுது. 

ஏதோ, கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதின மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்கேன் (2009)

குறிப்பா, காலேஜ்ல கிடைச்ச FREE INTERNET. இதையெல்லாம் மறுபடியும் என்னோட எழுத்துக்காகப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். நிறைய எழுதி, நிறைய பத்திரிகைகளுக்கு மெயில் அனுப்பினேன். வெகு சில articles பிரசுரமாச்சு. ஆனால், எல்லாம் ஆங்கிலத்தில் மட்டும். தமிழைப் பொறுத்தவரை - NO LUCK. 

REJECTIONS கொடுத்த பயம் 

அப்புறம், படிப்பு முடிஞ்சு IBM-ல் வேலை, அடுத்த இரண்டு வருஷங்கள்ல திருமணம், குழந்தை, அமெரிக்கப் பயணம்னு என் வாழ்க்கைல பல முன்னேற்றங்கள் வந்து நான் ரொம்ப நல்ல நிலைமைக்கு வந்துட்டாலும், நான் எழுதுன சிறுகதைகள் மட்டும் என் வீட்டைத் தாண்டி வேற எங்கேயும் வரல. 

பத்து வயசுல ஆரம்பிச்ச ஆசை, தொடர் முயற்சிக்குப் பின்னாடியும், நல்ல உழைப்புக்குப் பின்னாடியும், ஏன் இன்னும் தோல்வியிலேயே இருக்குன்னுற கேள்வி, என் மனச அரிச்சிட்டே இருக்கும். என்ன நிராகரிச்ச எல்லாரு முன்னாடியும் நிராகரிக்கப்பட்ட ஒரு நபராகவே கடைசி வரை இருந்துருவேனோன்னு பயமா இருக்கும். பாதி ராத்திரி, தூக்கமே வராது.

சிரிச்சிட்டே நிக்கிறேன்ல.. ஆனா, மன அழுத்தத்தின் உச்சக்கட்டத்தின் இருந்த காலம் அது (2015)

ஆனா, நான் என் முயற்சிய  நிறுத்தல. முயற்சிய மட்டும் நிறுத்தவே இல்ல. 

கதைக்குன்னு ஒரு YOUTUBE CHANNEL

பத்திரிக்கை, FM Radio, Blog - இதிலெல்லாம் தோற்று, இந்த முறை YOUTUBE-ல, ஒரு சேனல ஆரம்பிச்சேன். சேனல்னு சொல்லுறத விட. நான் எழுதுன கதைகளை சொல்லுறதுக்கு ஒரு தளம். அதுதான் சரியான description.

அதுல, என்னோட சிறுகதைகள, எனக்குப் பிடித்த இலக்கியத்த, நான் அத்தனை வருஷமா மொழிபெயர்த்து எழுதின கதைகள, நானே எழுதின தன்னம்பிக்கைக் கதைகள சொல்ல ஆரம்பிச்சேன். 

அது தான் - இந்த APPLEBOX.

உண்மையா சொல்லணும்னா, என் கடைசிக்கட்ட முயற்சிகளில் ஒண்ணு. 

சேனல் ஆரம்பிச்சேனே ஒழிய, எனக்கு YOUTUBE பத்தி A,B,C கூடத் தெரியாது. ஆனா, ஒண்ணு ஒண்ணா, கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். தத்தித் தாவி, பல்டி அடிச்சி எனக்குன்னு ஒரு format உருவாக்கிக்கிட்டேன். 

ஆரம்பத்துல, ஒரு 50 அல்லது 100 views வரும். ஆனா, views வருதோ, வரலையோ, எனக்குப் பிடிச்சத செய்துட்டே இருந்தேன். என்னோட பிரெண்ட்ஸ் சிலர், ஆரம்பத்துல இருந்தே எனக்கு ரொம்ப ஊக்கம் கொடுத்தாங்க. அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா, மக்கள் பாக்க ஆரம்பிச்சாங்க. அவங்க கிட்டேர்ந்து, நிறைய நல்ல வார்த்தைகள நான் கேக்க ஆரம்பிச்சேன்.

இந்த பட்டுப்போன செடியில சின்னதா தளிர் வந்தது. என்னோட கனவுகளுக்கு சிறகு முளைச்சிது. அது பறந்து, பறந்து இன்னைக்கு என்னோட கதைகளை மக்கள் கிட்ட கொண்டு சேர்த்துட்டு இருக்கு.

அதனால, இந்தச் செடிக்கு தண்ணீர் ஊற்றிய உங்க அத்தனை பேருக்கும் ஒரு பெரிய நன்றிங்க. நான் படித்த புத்தகங்களின் ஆசிரியர்களுக்கும், அனுமதியளித்த ஆசிரியர்களுக்கும், அனுமதியளித்த ஓவியர்களுக்கும், எனது மானசீக குருவாக நான் நினைக்கும் அத்தனை பேருக்கும் பெரிய, பெரிய, பெரிய நன்றி !!

சில்வர் பட்டன் கிடைத்தபோது (2020)

இதனால, நான் உங்களுக்குத் சொல்றது என்ன ?

மக்களே !! இது நமக்கான உலகம். நமக்கான வெற்றி. நமக்கான நாட்கள். யாருக்கும் பயப்படாதீங்க. எதற்கும் பயப்படாதீங்க. தொடர்ச்சியா தோல்வியப் பாக்குறீங்கன்னா, என்ன உங்களுக்கு எடுத்துக்காட்டா எடுத்துக்கோங்க. 

  • உனக்கு வாய்ப்புத் தர மறுத்தார்களா ? நீயே வாய்ப்பை உருவாக்கு
  • நிராகரிப்புகளைத் தாங்குமளவுக்கு நெஞ்சுரத்தை வளர்த்துக்கொள்
  • உனக்கான நாள் என்று ஒன்று வரும். அதுவரை முயற்சியை மட்டும் நிறுத்தவே நிறுத்தாதே !!

இவையே, எனது தாரக மந்திரங்கள். அவற்றையே, நான் உங்களுக்கும் சொல்லித் தருகிறேன். நான் கற்றுக்கொண்ட பாடங்களையே கதைகளாக எழுதி தன்னம்பிக்கை தருகிறேன். 

நம்ம தொடர்ந்து அந்த பயணத்துல இணைந்திருக்கலாம்னு சொல்லிட்டு என்னோட அறிமுகத்தை நிறைவு செய்றேன். நன்றி வணக்கம் !!

38 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

  1. You deserve applause.. For your self confidence... I wish you all successful career. Also I wish to work with you in developing inspiration to reading by which learning in each would be possible for a better world

    ReplyDelete
  2. Wow! My blessings and support forever, madam! Let me know if you need help with Website creation. :)

    ReplyDelete
  3. Super sis ur inspiration with me

    ReplyDelete
  4. Super sis ur inspiration with me

    ReplyDelete
  5. Super sis ur inspiration with me

    ReplyDelete
  6. I proud of you sister 😊. Keep continuing...

    ReplyDelete
  7. Nan uyi urulla varai muyarchi seiven , oru veelai muyarchi seivathai nan niruthinal , athanal than nee thottrai enru enn manasachi ennai kelvi kettkum . 👏👏👏👏👏👏👏👏
    No words sister .
    Etha neenga enakagave sonna mari erukku . Ungaloda entha varthaikal ennai motivate pannuthu . Ennaku nabikka kodutha ungalukku mikka Nandri .

    ReplyDelete
    Replies
    1. Thanks much Sago.. Keep going.. Passion deserves an applause..

      Delete
  8. அக்கா உங்க குட்டி கதைகள் ரொம்ப பிடிக்கும் தினம்மும் உங்க கதை கள் கேட்டால் தான் எனக்கு தூக்கம் வரும் நன்றி அக்கா

    ReplyDelete
  9. அக்கா, உங்களுடைய கதைகள் எல்லாமே நல்ல ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தந்து உற்சாகத்துடன் செயல்பட வைக்கிறது.

    பாரதி கண்ட புதுமைப் பெண்ணே! பார் போற்றப் பட வேண்டும்.

    இன்னும் உங்கள் பல படைப்புகளை காண காத்திருக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்கிறேன்.

    நீங்கள் பொழிந்த தேன்மொழியில் நனைந்து உருவாகிறது - "தேன் மிட்டாய் கதைகள்"

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ 🌷🌷 மேலும் வளர வாழ்த்துக்கள் 🌷🌷

      Delete
  10. SABARIMAAA MAKARAASIYAA IRUMA'' -AMMA MALARVIZHIMANGAYARKARASI

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா

      Delete
  11. Ungaloda lines laium motivation iruku ..keep rocking...

    ReplyDelete
  12. All the best sister. I used to watch your channel. Story telling is nice. Iam also online tamil writer.

    ReplyDelete
  13. sis lastaa eppa TN ku vandinga...ipavum california la irukingla.

    ReplyDelete
  14. Super sis.. romba inspiringa irunthathu.. na epo than unga channel pathan.. story solrathu rmba nala iruku.. neram porathe therila.. ketute irukanum pola iruku.. spr sis

    ReplyDelete
  15. Un uyarntha kanavugalai adaya ennam endra ondrirku uyir koduppayanal oru naal un kanakkal nijangalagum nichayamaga..!!

    ReplyDelete
  16. உங்கள் பதிபகத்திற்கு எங்களையும் அழைக்க வேண்டும் அக்கா.

    ReplyDelete
  17. 😊na first keta story devadas, antha movie pathu romba kastama irunthuchu apo tha you tube la kathai keka search pana unga story nd voice romba pudichathu athuku aprm bengali novels romba pudichathu . Unglaum romba pudichu iruku akka 💗

    ReplyDelete
  18. The potential of Sabari is infinite , living as a mom plus being a social media star is not easy as we think , which required lot of sacrifice and motivation to stay positive mindset … but you made it Sabari i know little bit about your travel . I read some where the explanation of Success “ success if a peace of mind to know that you did your best “ . Just maintain the satisfaction 🙂good luck keep inspired !!!

    ReplyDelete
  19. நீங்க எழுதிய கதயைவிட உங்கள் அனுபவ கதை சிறப்பு...எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  20. Love your short Tamil stories which is bedtime stories that I recite to my children every night. I am glad to come across your website for the pleasure of Tamil reading. Should consider compiling stories into a book. All the best and may your pursuit to spread literature will be blessed.

    ReplyDelete
Previous Post Next Post