நீங்கள் எதற்காவது கடுமையாக முயற்சி செய்து, பின்னர் அதைப் பாதியிலேயே நிறுத்தி வைத்திருந்தீர்களானால், இந்தக் கதையைக் கேட்ட பின் அதைத் தொடர்வீர்கள்.
To Watch This Story as a Video, Please click the PLAY BUTTON
சில ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேல் நாட்டில் ஒரு பொறியாளர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் சிம்ச்சா பிளாஸ். அவருக்கு தனது இளம் வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தது. தனது நாட்டின் விவசாய முன்னேற்றத்துக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற விருப்பமும் இருந்தது.
அதற்குக் காரணம், என்ன தெரியுமா ? அவர்கள் நாட்டிலிருந்த ஒரு பெரிய பிரச்சனை. அதாவது, இஸ்ரேல் நாட்டின் வட பகுதி நல்ல தட்ப வெட்பத்தோடும், நீர்வளத்தோடும் செழிப்பாக இருக்க, தென்பகுதி அதற்கு நேர்மாறாக, பாலைவனம் போல இருந்தது.
இதற்குத் தான் சிம்ச்சா பிளாஸ் தனது நாட்டின் விவசாய முன்னேற்றத்துக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
தனது இளமைக் காலத்தில் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, பின்னர் நாற்பத்தைந்து வயதில், விவசாயம் தொடர்பான ஆய்வில் இறங்கினார். ஆய்வு அவர் நினைத்த அளவுக்கு சாதாரணமாக இல்லை. அவரை ஆட்டி அலைக்கழித்தது.
வறண்ட நிலப் பகுதிக்கு குழாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டுவந்து பார்த்தால், அங்கிருந்த வெயிலுக்குத் அது நொடிப்பொழுதில் ஆவியாகிவிட்டது. சரி, இரவு வேலைகளில் தண்ணீர் பாய்ச்சலாம் என்றால், நீரை வேர் உறிஞ்சும் முன்னர், சூரியன் உறிஞ்சிவிட்டது.
ஆனால், ஒவ்வொரு முறை தோல்வியடையும்போதும், அந்தத் தோல்வியால் துவண்டுவிடாமல், அதற்கான காரணத்தை மட்டுமே ஆராய்ச்சி செய்தார் சிம்ச்சா பிளாஸ். இப்படியே நாட்கள் செல்ல, அவருக்கு சலிப்பு தட்டியது. ஆனால், அவரது முயற்சியை நிறுத்தவில்லை.
இப்படியிருக்கும் போது, அவர் ஆராய்ச்சி செய்த நிலத்துக்குப் பக்கத்தில், ஒரு அத்தி மரத்தை அவர் கண்டார். அந்த மரம் அமைந்திருந்த நிலப்பகுதி, பாளம் பாளமாக வெடித்திருக்க, மரம் மட்டும் செழிப்பாக இருந்தது. இவ்வளவுக்கும் அந்த மரத்துக்கு யாரும் தண்ணீர் கூட ஊற்றுவதில்லை.
ஊரார் அதை அதிசயம் என்று சொன்னார்கள்.
மற்றவர்கள் கண்ணுக்கு அது அதிசய மரமாகப் பட்டாலும், சிம்ச்சா பிளாசுக்கு அது அதிசயமாகவோ, இல்லை எதார்த்தமாகவோ தெரியவில்லை. அதில் ஏதோ சூட்சமம் இருப்பதாகவே பட்டது.
"வறண்ட பூமியில், தண்ணீரே ஊற்றாமல், இந்த மரம் எப்படி செழிப்பாக நிற்கிறது ?" என்ற கேள்வி அவரை யோசிக்க வைத்தது.
அதனாலோ என்னவோ, அந்த மரத்தைக் கடக்கும்போதெல்லாம், அவர் அதை சில நிமிடங்கள் நின்று உற்று கவனிப்பார். அந்த மாதிரி ஒருநாள், அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு நபர் அந்த மரத்தினருகே குழி தோண்டிக் கொண்டிருந்தார். மரத்துக்குக் கீழே ஒரு குழாய் இருக்கிறதாம். அதில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்வதற்காகத் தான் குழியைத் தோண்டப் பட்டதாம்.
இதை விசாரித்துத் தெரிந்து கொண்ட சிஞ்சா பிளாஸ், அருகில் சென்று அந்தக்குழியை எட்டிப் பார்த்தார். குழாயையும், அதில் ஏற்படும் நீர்க்கசிவையும் அவரால் பார்க்க முடிந்தது. மேலும், அந்தக் கசிவு நீர் மரத்தின் வேரில் வடிந்து கொண்டிருந்தது. வெளியிலோ, நீர்கசிவுக்கானத் தடையமே தெரியவில்லை.
அங்கு கிடைத்தது சிம்ச்சாவின் பல வருடத் தேடலுக்கான விடை. அந்த விடை தான் இன்று நாம் பார்க்கும் DRIPPING IRRIGATION. அதாவது சொட்டு நீர்ப் பாசனம்.
இன்றும் கூட, பல நாடுகளில் விவசாயம் செய்ய இந்த சொட்டுநீர்ப் பாசனமுறைப் பின்பற்றப்பட்டு, அவரது தேடலுக்கான பயனை இந்த உலகம் முழுவதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இப்போது புரிகிறதா ? இந்தக் கதை உங்களை inspire செய்யும் என்று நான் சொன்னதற்காக காரணம்..
ஆம், நண்பர்களே !!
நீங்கள் எதற்காவது கடுமையாக முயற்சி செய்து, பின்னர் அதைப் பாதியிலேயே நிறுத்தி வைத்திருந்தீர்களானால், அதைத் தொடருங்கள். அது உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். அதுவரை தாங்கும் சூழ்நிலையும், மனோதிடத்தையும் இயற்கையும் இறைவனும் உங்களுக்குக் கொடுக்கட்டும். நன்றி.
Check these stories also from APPLEBOX
உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள்
தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil
தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil
நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
மந்திர கடிகாரம் - Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil
நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்
நான்கு ரகசியங்கள் - Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil