Moral Story in Tamil - ட்ரோஜன் குதிரையும் கிரேக்கர்களும்

நம்பிக்கை தவறு கிடையாது. ஆனால், தவறான விஷயங்கள், தவறான மனிதர்கள் மீது வைக்கிற நம்பிக்கை தவறாகும். அதை உணர்த்துவதற்காக ஒரு கதை சொல்லட்டுமா ? 

கிரேக்கத்தில், இப்படி ஒரு கதை இருக்கிறது. 

கிரீஸ்சுக்குப் பக்கத்தில் “ட்ராய்”  என்று ஒரு நாடு இருந்ததாம். அந்த நாட்டு இளவரசன் ஒரு தவறைச் செய்துவிட, கிரேக்கர்களுக்கும் டிராய்க்கும் ஒரு போர் மூண்டதாம். ஆனால், பத்து வருட முயற்சிக்குப் பின்னும், அவர்கள் வித்தைகள் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. 

அந்த அளவுக்கு பலமாக இருந்திருக்கிறது "ட்ராய்" நகரத்தின் பாதுகாப்பு அமைப்புகள். 

ஆனால் கடைசியாக, அந்த நகரத்தின் பாதுகாப்பு எப்படி பிடிக்கப்பட்டது தெரியுமா ?
 
ஒரு மரக் குதிரையால். அட, ஆம் மக்களே !! ஒரு சாதாரண மரக் குதிரையால் தான்   .



அதாவது, அடுத்த முறை 'ட்ராய்' நகரத்தை முற்றுகையிடும்போது, கிரேக்கர்கள் ஒரு பெரிய மரக் குதிரையையும் தங்களோடு எடுத்துப் போயிருக்கிறார்கள். முற்றுகை ஆரம்பித்த சில நாட்களில், தோல்வியடைந்து களைத்துப் போனவர்கள் மாதிரி வெளியேறியிருக்கிறார்கள். ஆனால், குதிரை அங்கேயே விடப்பட்டிருக்கிறது.

“பயந்தாங்கொள்ளிப் பசங்க. குதிரைய கூட போட்டுட்டு ஓடிட்டாங்களா ?? தூக்கிட்டு வாங்கடா அந்த வெற்றியின் சின்னத்த”, என்று ட்ராய் மன்னன் சொல்ல, ட்ராய் நகர காவலர்கள் அந்தக் குதிரையை நகரத்துக்குள் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

அந்த நாளின் இறுதியில், குதிரையிலிருந்து ஒரு கதவும் திறக்க, அதனுள்ளே ஒழிந்திருந்த கிரேக்க வீரர்கள் வெளியே வந்திருக்கிறார்கள். நகரத்தையே துவம்சம் செய்திருக்கிறீர்கள்  

இப்படித் தான் கைப்பற்றப்பட்டிருக்கிறது ட்ராய் நகரம்.

இதே மாதிரி தான் மக்களே !! நீங்கள் பார்க்கிற எல்லாமே வெளித்தோற்றத்தில் எப்படியோ, அப்படியே உள்ளேயும் கிடையாது. மனிதர்கள், விளம்பரங்கள், பொருட்கள். இவ்வளவு ஏன் ? இந்தக் கதையைச்  சொல்லும் நானுமாக்கூட இருக்கலாம்.

அதனால், ஆராய்ந்து பார்த்தே எதையும் நம்புங்கள். நேரம் எடுத்துக் கொண்ட பின் மட்டுமே, யாரையும் நம்புங்கள்.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post