பச்சோந்தி - கதை விமர்சனம் | A Sensitive Story By Anton Chekhov

பச்சோந்தி - இடத்துக்குத் தகுந்த மாதிரி தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்கிற உயிரினம்.

அதற்குப் போட்டியாக, இந்த உலகத்தில் இன்னொரு உயிரினமும் இருக்கிறது. பச்சோந்தியாவது, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே நிறத்தை மாற்றிக்கொள்கிறது. ஆனால், இந்த உயிரினம் எது எதற்கெல்லாம் நிறம் மாற்றிக்கொள்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

அந்த அளவுக்கு 'தனது நிற மாற்றத்தால், யாருக்கு எந்தக் கேடு வந்தாலும்' அதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாது சட்டென்று நிறத்தை மாற்றிக்கொள்ளும் இந்த உயிரினம்.

அந்த உயிரினத்தின் பெயர் தான் 'மனிதன்'

இந்த மனிதன் என்கிற உயிரினம் 'எப்படி எப்படியெல்லாம்' தனது பச்சோந்தித் தனத்தை வெளிப்படுத்தும் என்பதைக் குறித்து ரசிய எழுத்தாளர் அன்டன் செக்காவ் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.



"தி சமிலியோன்" என்னும் தலைப்பில் அமைந்த இக்கதை இவ்வாறாக நகர்கிறது.

இதில், ஹிருக்கின் என்கிற பொற்கொல்லரின் விரலை நாய் ஒன்று கடித்து விடுகிறது. அந்த நபர் வலியால் அலற, அங்கு கூட்டமே கூடி விடுகிறது. அந்தக் கூட்டத்தை விசாரிக்க வருகிறார் ஒச்சுமெல்லோ என்கிற காவல்காரர்.

அவர்கள் நாட்டு சட்டப்படி, கடிக்கும் நாய்களுக்கும் அவற்றின் உடைமையாளர்களுக்கும் நிச்சயம் தண்டனை உண்டு. அதனால், அவர் கடிபட்டவனிடம் சொல்கிறார் "இது மிகப்பெரிய தவறு. நான் நிச்சயம் உங்களுக்கு நீதியை வாங்கித் தருகிறேன்", என்று.

பின்னர், "இது யாருடைய நாய் ?" என்ற கேள்வியை அவர் முன்வைக்க, கூட்டத்தாரிடமிருந்து வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறான பதில்கள் கிடைக்கின்றன.

அந்த பதில்களில், அவர்கள் சொல்லும் உடைமையாளர்களின் பெயர்களைப் பொறுத்து, அவரது பேச்சு மாறுபடுகிறது. உடைமையாளர்களின் அந்தஸ்த்தைப் பொறுத்து, அவர் கடிபட்டவரை நடத்தும் விதமே மாறுபடுகிறது. அவருக்குள் இருக்கும் பச்சோந்தி வெவ்வேறு நிறங்களை வெளிப்படுத்துகிறது.

'இறுதியாக அந்த நாயின் உடைமையாளரைக் கண்டுபிடித்தார்களா ? கடிபட்ட ஹிருக்கினுக்கு நீதி கிடைத்ததா ?' என்பது மீதி கதை.

ஆங்கிலத்தில் இந்தக் கதையை வாசிக்க, கீழ்கண்ட இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். READ THIS STORY IN ENGLISH

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post