ஒரு தீபத்தின் கதை - A Motivational Story in Tamil

 "தர்மம் தலைகாக்கும்" என்று சொல்வார்கள். ஆனால், இந்த தர்மத்தையே அடிப்படையாக வைத்து, இங்கு ஏமாற்றுபவர்களும் அதிகம். ஏமாறுபவர்களும் அதிகம். 


அப்படியெனில், "இதற்கு மத்தியில் தர்மத்தை எவ்வாறு கடைபிடிப்பது ?" என்ற கேள்வி எழுகிறது இல்லையா ?


அந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் ஒரு கதையைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.


ஒரு ஊரில், ஒரு  பெரிய பண்ணையார் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் பொறுமையானவர், தர்ம சிந்தனை மிக்கவர். கடவுள் வழிபாட்டின் மீதும் நம்பிக்கை கொண்டவர்.


ஒரு நாள், அவருக்கு தொலைதூரத்தில் எரியும் ஒரு அகண்ட ஜோதியைப் பற்றித் தெரியவந்தது. அதைத் தான் தரிசிக்க வேண்டும், அதிலிருந்து தீபத்தை எடுத்துவந்து தனது வீட்டில் நுந்தா விளக்கை ஏற்ற வேண்டுமென்று ஆசையும் ஏற்பட்டது.


'நுந்துதல்' என்றால் 'தூண்டுதல்' என்று பொருள். 'நுந்தா' என்றால் 'தூண்டாத'. ஆக, தூண்டப்படாத விளக்கு, அணையாத விளக்குத் தான் இந்த "நுந்தா விளக்கு". புனிதமான அகண்ட ஜோதியிலிருந்து தீபத்தை எடுத்துவந்து, அப்படியொரு ஒரு நுந்தா விளக்கைத் தான் ஏற்ற ஆசைப்பட்டார் பண்ணையார்.


ஆனால், அகண்ட ஜோதி இருந்ததோ, தொலைதூரத்திலிருந்த ஒரு மலையில். பண்ணையார் இருந்த இடத்திலிருந்து அந்த மலைக்குச் சென்றுவர, ஆறு நாட்கள் பிடிக்கும். போவதற்கு மூன்று நாட்கள். திரும்பி வருவதற்கு மூன்று நாட்கள். அது கடுமையான பயணமும் கூட.


அதனால், அந்த செல்வதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும், பார்த்துப் பார்த்துச் செய்தார் பண்ணையார்.


பிரயாணம் செய்வதற்கான ஒரு வண்டியை அமர்த்தியாயிற்று. தேவையான உணவு, உடை, எரிபொருள் எல்லாவற்றையும் எடுத்தாயிற்று. கூடவே, திறமையான நான்கு வேலையாட்களும் தேர்ந்தெடுத்தாயிற்று. 


பயணம் தொடங்கியது. 


மூன்றே நாட்களில், அந்தக் குழு 'ஜோதி' எரிந்த இடத்தைச் சென்றடைந்தது. 


ஜோதியை மனமார தரிசித்தார் பண்ணையார். தான் கொண்டு வந்திருந்த நெருப்புப் பந்தத்தை எடுத்து, ஜோதியில் தொட்டு, ஏற்றவும் செய்தார். தீபம் பிரகாசித்தது. மறுபடி அங்கிருந்து, வீட்டை நோக்கி அவர்களது பயணமும் தொடங்கியது. 


ஆனால், சென்ற முறை போன்று அந்தப் பயணம் எளிதானதாக இல்லை. 


இந்த முறை பந்தத்தைப் பாதுகாக்க வேண்டும். காற்று, மழை, சாரல் - எதிவுமே அணைக்காதவாறு தீபத்தைக் கொணர்ந்தாக வேண்டும். இரவுப் பொழுதுகளில், யாரேனும் ஒருவர் தூங்காது விழித்திருந்து அந்த தீபத்தைக் காக்க வேண்டும். 


பண்ணையார் இவை எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்ள, தீபம் பயணித்தது.


முதல் இரண்டு நாட்கள் அந்தப் பயணம் எவ்வித பிரச்னையுமின்றி நடந்தது. ஆனால் மூன்றாவது நாளின் இரவிலோ, தனது தூக்கத்தின் நடுவில் எழுந்திரித்துப் பார்த்த பண்ணைக்காரருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், அன்றைய இரவு அந்த தீபத்தைப் பாதுகாத்துக் கொண்டிருந்த அந்த வேலைகாரனை திடீரென்று காணவில்லை. அவனோடு சேர்த்து, அந்த தீபத்தையும் காணவில்லை.


பண்ணைக்காரர் திடுக்கிட்டுப் போனார். சுதாரித்துக்கொண்டு சத்திரத்தில் விசாரித்தார். அவன் சென்ற பாதையை அறிந்துக்கொண்டு, அவன் இருந்த இடத்தையும் அடைந்தார். அவன் ஒரு பாழடைந்த மண்டபத்தில் நின்றுகொண்டிருந்தான். அவனோடு சேர்த்து, இன்னொருவரும் நின்றுகொண்டிருந்தான். இருவரும் காரசாரமாகப் பேசிக்கொள்வதும் பண்ணையாரின் காதில் விழுந்தது. 


"இதோ !! திட்டமிட்டபடி தீபத்தைக் கொண்டுவந்துவிட்டேன். பேசிய பணத்தைத் தாருங்கள்", என்றான் வேலைக்காரன்.


"ம்ம்ம்ம்.. திட்டம்போட்டது நாங்கள் தானே !! தீபத்தைக் கொடு. பணம் தருகிறேன்", என்றான் மற்றவன். 


பண்ணைக்காரருக்கு அவர்களது சதி புரிந்தது. ஏற்கனவே, அவர்களெல்லாம் ஒரு திட்டத்தைத் தீட்டி, பின்னர்  தீபத்தைக் கவர்ந்து கொண்டது அவர் மண்டைக்கு உரைத்தது. 


அவர் கோபத்தோடு குகைக்குள் நுழைந்து, தீபத்தைக் கைப்பற்றினார். வேலைக்காரனைப் பார்த்து  கோபத்தோடு முறைத்தார். அவனோ, மிகவும் நிதானமாக நின்றான். 


"எஜமானே !! தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள். ஒரு தர்ம காரியத்துக்காகத் தான் நான் இப்படிச் செய்தேன். இந்த ஊர் மிகவும் சிரமப்படுகிறது. இந்த தீபம் உங்கள் ஊருக்குத் தேவைப்படுவதைவிட , இந்த ஊருக்குத் தான் அதிகமாகத் தேவைப்படுகிறது. அதனால் தான் செய்தேன்", என்றான்.


"என்ன எஜமானரே !! நீங்கள் தான் தர்மம் செய்ய வேண்டும். தர்மம் செய்ய வேண்டுமென்று அடிக்கடி சொல்வீர்கள். இந்த சிறிய உதவியை செய்யக்கூட உங்களுக்கு மனம் வரவில்லையா ?? எல்லாம் வெறும் பேச்சு மட்டும் தானா ??", என்று அவரையே கேள்வி கேட்டான்.


அவர் மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்து, அவ்விடம் விட்டகன்று வீடு சென்றார். 


பயணம் தொடர்ந்தது. 


அந்தப் பயணத்தில், அவரோடு இருந்த ஒவ்வொரு வேலையாட்களும் ஒவ்வொன்று நினைத்துக்கொண்டார்கள்.


"இவரென்ன, இப்படி முசுடாக இருக்கிறார் ?", என்று ஒருவன்.


"இவரு ரொம்ப சுயநலமா இருக்குறாரு. தீபத்தைப் பகிர்ந்துகொள்வதில் தவறென்ன இருக்கிறது !!" , என்று மற்றவன்.


"அது சரி !! தானம், தர்மமென்று வாய்கிழியப் பேசுவார். இப்போது எங்கே போயிற்றாம் ? இவரது தர்மம்..", என்று மேலும் ஒருவன்.


மத்தியில், அமைதியாக உட்கார்ந்திருந்தார் பண்ணையார்.


வண்டி நகர்ந்து கொண்டேயிருந்தது. ஆனால், அவர்கள் ஊருக்குப் போய்ச்சேர, ஒரு மணி நேரமே பாக்கியிருக்கையில், அது மூதாட்டி ஒருத்தியால் நிறுத்தப்பட்டது. 

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post