பணத்தைப் பற்றி 5 கதைகள் - Don't Miss These Motivational Videos

நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், பணத்தின் அடிப்படையைப் பற்றி, பணம் சம்பாதிக்கும் சூட்சமங்கள் பற்றி அறிய வேண்டியது அவசியமாக இருக்கிறது.

  • பணம் யாரிடம் சேர்கிறது ?
  • பணத்தின் 5 விதிகள் யாவை ?
  • பணம் சம்பாதிக்க உதவும் யுக்திகள் எவை ?

ஆகிய கேள்விகளுக்கான விடையை நீங்கள் அறிவதும் அத்தியாவசியமாக இருக்கிறது.

ஆகவே, இவற்றை வலியுறுத்தி நான் சில உதாரணத்துவக் கதைகளைப் பத்திரிக்கையில் வெளியிட்டிருக்கிறேன். எனது வலையொளியில் இதற்காக, சில காணொளிகளும் தந்திருக்கிறேன். அவற்றில், நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கியமான காணொளிகள், இதோ உங்கள் பார்வைக்கு.1. பணத்தைப் பற்றிய 5 விதிகள்

பணத்தைப் பற்றி அறிந்துகொள்ள, இருப்பதிலேயே ஒரு சிறந்த புத்தகம் "பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்" என்னும் புத்தகமாகும். அப்புத்தகத்தில், பணத்தின் 5 விதிகள் என்று ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது. அருமையான கதை போன்று இருக்கும் அப்பகுதி, நம் ஒவ்வொருவருக்குமே முத்தான 5 பாடங்களைச் சொல்லித்தருகிறது. அதுவும் கதை வடிவில். அந்தக் கதையின் சுருக்கம் இதோ, இந்தக் காணொளியில். Play the video and watch this Motivational Story in Tamil from APPLEBOX


2. பணத்தைப் பெருக்கும் 3 யுக்திகள்

இங்கு பலரும், சிக்கனமாக இருத்தலும், சேமித்தலுமே பணத்தைப் பெருக்கும் வழிகள் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு அவை மட்டுமே கைகொடுக்காது. அதற்கென்று, மேலும் சில சூட்சமங்களும் உள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு, எனது வாழ்க்கை அனுபவத்தையும் சேர்த்து நான் எழுதிய கதைதான் "பூக்கடை வைத்திருந்த தந்தையின் அறிவுரை" என்னும் கதை.

நீங்கள் கவனிக்கத் தவறிய பல விஷயங்களை உங்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் அந்தக் கதையின் காணொளி, இதோ. Play the video and watch this Motivational Story in Tamil from APPLEBOX


3. ஈர்ப்பு விதியும் பணமும்

பணம் சம்பாதித்தால் மட்டுமே வாழ்க்கை நிம்மதியாக அமைந்து விடும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது நூறு சதவிகிதம் உண்மையெல்லாம் இல்லை. நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து நீங்களும் உங்கள் சந்ததியினரும் நல்லவழியில் அனுபவிக்க வேண்டுமென்றால், நீங்கள் செய்ய வேண்டிய வேறு ஒரு காரியமும் இருக்கிறது. அது தான், உங்கள் சிந்தனையை நீங்கள் மற்றும் முறை.

அதுவும், ஈர்ப்பு விதியின் அடிப்படையில் அமைந்த முறை. அதைப்பற்றி 2022-ல் ஒரு கதையை நான் பிரசுரம் செய்திருந்தேன். அதே கதையை காணொளியாகவும் ஆக்கியிருந்தேன். அந்தக் காணொளி, இதோ உங்கள் பார்வைக்கு. Play the video and watch this Motivational Story in Tamil from APPLEBOX


4. பணம் யாரிடம் சேரும் என்னும் ரகசியம்

"எப்படித் தான் சிலரிடம் மட்டும் பணம் சேர்கிறது ?", என்ற கேள்வி உங்கள் எல்லோர் மனதிலும் இருக்கும். அந்தக் கேள்விக்கான விடை உழைப்பைத் தவிர வேறு எதுவுமே கிடையாது. அந்த உழைப்பும் எப்படி இருக்க வேண்டும் ? காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிற உழைப்பாக இருக்க வேண்டும். இதை வலியுறுத்தி கடைந்த 2021-ல் ஒரு கதையை வெளியிட்டிருந்தேன். அதே கதை ஒரு காணொளி வடிவில், இதோ உங்கள் பார்வைக்கு. Play the video and watch this Motivational Story in Tamil from APPLEBOX


5. அதிர்ஷ்டமும் பணமும்

நம்மில் பலர். அதிர்ஷ்டம் என்பது தானாக வருவது என்றும், அது வந்தாலே ஒருவர் முன்னேறிவிடுவார் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதிர்ஷ்டமே வந்தாலும் முறையான வழியில் அதைப் பயன்படுத்தாதவர்களால், அதை தக்கவைத்துக்கொள்ள இயலாது. ஆகவே, அந்த வழியை உணர்தல் மிக மிக அவசியம். அதற்காக ஒரு சுவாரசியமான கதை இதோ. Play the video and watch this Motivational Story in Tamil from APPLEBOX


இந்தக் காணொளிகளைப் பாருங்கள். இவற்றில் சொல்லப்பட்டுள்ள கதைகளை உங்கள் மனதில் பதிய வையுங்கள். வாழ்வில் செயல்படுத்துங்கள்.

மேலும் இதுபோன்ற கதைகளுக்கு எனது வலையொளிப் பக்கமான என்னும் பக்கத்தைத் தொடர்ந்து கவனித்து வாருங்கள். நன்றி !!

1 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post