தள்ளுவண்டி ஆரம்பித்தது எப்படி - A Motivational Story

உங்களுக்கு எதாவது ஒரு ஐடியா இருந்து, அதை இன்னாள் வரையிலும் செயல்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களா ? சிறியதோ, பெரியதோ !! புத்திசாலித்தனமானதோ, முட்டாள்தனமானதோ !! எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியது, ஏற்க மறுப்பதோ !! ஏதோ ஒன்று. ஐடியா இருந்து அதைச் செயல்படுத்தத் தயக்கமும் இருந்தால், இந்தக் கதையைக் கேட்டபின் நிச்சயம் செயல்படுத்துவீர்கள்.

To watch this Motivational Story as Video, Please click the PLAY button below.


கதையை ஆரம்பிக்கலாமா ??

சார்லஸ் என்ற 'கௌ பாய்'

நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில், சார்லஸ் குட்நயிட் என்றொரு ராஞ்சர் இருந்தார். ராஞ்சர் என்றால் பண்ணைக்காரர் என்று அர்த்தம். நூற்றுக்கணக்கான மாடுகள், எருமைகள், பன்றிகள் என்று வளர்த்து அவற்றை இறைச்சிக்காக விற்பதுதான் இந்த மாதிரியான பண்ணைக்காரர்களுடைய தொழில். அந்தக் காலத்தில், அவரைப் போலவே டெக்ஸாசில் பல பண்ணைக்காரர்களும் உண்டு. இவர்களையும் இவர்களிடம் வேலை செய்பவர்களையும் 'கௌ பாய்ஸ்' என்று சொல்வார்கள்.

வந்தது ஒரு சவால் 

நான் மேலே சொன்ன இந்த சார்லசுக்கு 1860-க்குப் பின், ஒரு மிகப்பெரிய சவால் உண்டானது. குறிப்பாக அமெரிக்காவில் இறைச்சி விற்பனையாகட்டும், ஏற்றுமதியாகட்டும், விரிவடைய ஆரம்பித்த சமயம் அது. கொள்முதல் அதிகமானால், உற்பத்தியும் அதிகமாக வேண்டும். அப்பொழுது மட்டும்தான் லாபமும் அதிகரிக்கும். இல்லையா ??

அதனால், அதை ஈடுகட்டுவதற்காக சார்லஸ் தனது பண்ணையை விரிவுபடுத்த வேண்டியிருந்தது. பண்ணை விரிவுபடுத்தப்பட்டு, கால்நடைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. எண்ணிக்கை உயர்ந்ததால், அவற்றிற்குத் தேவையான புல்லைத்  தேடி, தொலைதூரம் சென்று மேய்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. 

சார்லஸின் பணியாளர்கள் அப்படித் தொலைதூரம் சென்று கால்நடைகளை மேய்க்கச் செல்லும் பாதையில், எந்தவொரு உணவகமோ, தேநீர் விடுடியுமோ கூடக் கிடையாது. அது சரிதான். வெட்ட வெளியில், பொட்டைக் காட்டில், யார்தான் உணவு விடுதியை வைத்திருப்பார்கள் ?? 

அதனால், அந்தப் பணியாளர்கள் தங்களுக்கான உணவைத் தங்களது பைகளில் கட்டிக் கொள்வார்கள். ரொட்டித் துண்டுகள், உப்பிட்டுப் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிறிய தண்ணீர் குடுவை இவ்வளவுதான் அவர்களால் எடுத்துச் செல்லவும் இயலும். அது அவர்களுக்கு மிகுந்த சோர்வை ஏற்படுத்தியது. ஆனால், என்ன செய்வது ? 'வயிற்றுப் பிழைப்புக்காக இதையெல்லாம் சகித்துதானே ஆகவேண்டும்' , என்று சகித்துக் கொண்டார்கள் அவர்கள்.

வேலைக்காரர்களின் கஷ்டத்தை உணர்ந்த சார்லஸ்

இப்படியிருக்கும்போது, ஒரு நாள் எதேச்சையாக பண்ணைக்காரர் சார்லசும் அவர்களுடன் பயணிக்க வேண்டிவந்தது. அவர்களுடைய ஒரு நாள் என்பது எத்தனை கொடூரமாக இருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். காய்ந்துபோன ரொட்டித் துண்டுகள், வறட்டி மாதிரியான இறைச்சி, தொண்டையை நனைக்கக் கூடப் போதாத தண்ணீர். இவற்றையெல்லாம் பார்த்து, அவருக்கு சங்கடமாகிப் போனது.

'உற்சாகமாக உழைப்பதற்கான மூலதனமே உடல்தான். அந்த உடலுக்கு மூலதனம் உணவு. இப்படி மோசமான உணவை சாப்பிட்டுக்கொண்டு இவர்களால் எப்படி உற்சாகமாக உழைக்க முடியும் ? நாளடைவில், இது இவர்களது உடல்நிலையை பாதித்து விடாதா ?' , என்று யோசித்தார் சார்லஸ். 

'இவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும். ஒரு வேளை மட்டுமாவது, சூடான நல்ல உணவைக் கொடுத்தாக வேண்டும்.' , என்று தீர்மானமும் செய்தார்.

ஊராரின் கேலி 

"பொட்டல் காட்டில் சூடான உணவு வேண்டுமென்றால், கையோடு ஒரு சமையல்காரரையும் தான் அனுப்ப வேண்டும் " , என்று கேலியாக அவரது உறவினர்கள் சொல்ல, "அட, இதுவே நல்ல யோசனையாக இருக்கிறதே !!" என்று நினைத்த சார்லஸ், பணியாட்களின் கூடவே ஒரு சமையல்காரரையும் அனுப்ப முடிவு செய்தார்.

சமையல்காரரோ, "இது இதெல்லாம் இருந்தால் மட்டுமே என்னால் சமைக்க முடியும். இவற்றையெல்லாம் தூக்கிக்கொண்டு போவதற்கு ஒரு பெரிய  வண்டியே தேவைப்படும் போலிருக்கிறதே !!", என்று வேடிக்கையாகச் சொல்ல ,"செஞ்சிட்டாப் போச்சு", என்ற ரீதியில் ஒரு வண்டியையும் ஏற்பாடு செய்து விட்டார்.

உருவாச்சு ஒரு வண்டி 

மரத்தால் செய்யப்பட்ட சிறிய வண்டி அது. சமைக்கத் தேவையான பொருட்கள் மற்றும் அடுப்பு,  அடிப்பகுதியில் ஒரு பெரிய தண்ணீர் பீப்பாய், அதை ஓட்டிக்கொண்டு போக ஒரு சமையல்காரர். உணவு இடைவேளைகளின் போது மட்டும் நிறுத்தப்பட்டு, துரிதமாக சமைத்துக் கொடுக்கப்படும் சூடான உணவு மற்றும் காப்பி. இப்படித்தான் இருந்தது அந்த வண்டியின் செயல்பாடு.



அது தாங்க 'சக் வேகன்' 

என்னதான், போகிற போக்கில் முளைத்த ஐடியா என்றாலும், சார்லஸ் நினைத்ததுபோல, அவரது பணியாட்களை அவரால் நல்ல உணவைத் தர முடிந்தது. அவரது செல்லப் பெயரான 'சக்' அடைமொழியாகக் கொடுக்கப்பட்டு,  அந்த வண்டி 'சக் வேகன்' என்ற பெயரும் கிடைத்தது.

ஆரம்பத்தில், வேடிக்கையாகத் தெரிந்த அந்த வண்டி, பின்னாளில் பலராலும் ஒரு நல்ல வடிவமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிற பண்ணைக்காரர்களும் அந்த மாதிரியான வண்டிகளைத் தயார் செய்து பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

இப்படி அன்றொரு நாள், மேய்ச்சலுக்காகச் சென்ற தனது பணியாளர்களுக்கு, 'ஒரு வேளையேனும் நல்ல உணவு வழங்க வேண்டும்' என்ற நோக்கத்தில் சார்லஸ் ஆரம்பித்த இந்த வண்டிதான்,  இன்றும் கூட, பிழைப்புக்காக வெளியூர்களுக்குச் சென்று வாழ்ந்துகொண்டு, குறைந்த பணத்தில் உணவு கிடைக்காதா என்று ஏங்கும் எத்தனையோ உழைப்பாளிகளுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிற தள்ளுவண்டிகளின் ஆரம்பப் புள்ளி. 

இந்த சார்லசுடைய பெயர் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், 'உழைப்பவர்களுக்கு நல்லதொரு உணவைக் கொடுக்க வேண்டும்' என்ற அவருடைய நோக்கத்தை இன்றளவும் அந்த வண்டிகள் நிறைவேற்றிக் கொண்டு தான் இருக்கின்றன.

Motivational Message in Tamil

இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா ? சாதாரணமாக இருக்கிறது என்றோ, பிறர் அதைக் வேடிக்கையாக எண்ணுகிறார்கள் என்றோ, இதனால் நமக்கொரு பெரிய லாபமொன்றும் இல்லையே என்றோ, சார்லஸ் அன்று நினைக்கவில்லை. தனது பணியாளர்களுக்கு நன்மை பயக்கும் என்ற ஒரேவொரு நூலைப் பிடித்துக்கொண்டு, நினைத்த மாத்திரத்தில் அதை அவர் செயல்படுத்திவிட்டார். 

நம்மில் பலருக்கும் கூட இந்த மாதிரியான யோசனைகள் அவ்வப்போது வரும். ஆனால், சாதாரணமாக இருக்கிறது என்றோ, பிறர் அதைக் வேடிக்கையாக எண்ணுகிறார்கள் என்றோ, இதனால் நமக்கொரு பெரிய லாபமில்லையே என்றோ, நம்மில் பலரும் அவற்றைச் செயல்படுத்துவதேயில்லை.

இப்படி செயல்படுத்தாமல் விட்டுவிடும் பழக்கம் கூட, இன்று நமது முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கலாம். 

அதனால், உங்களுக்கு ஏதாவது ஒரு ஐடியா இருந்தது என்றால், அதை இன்னாள் வரையிலும் செயல்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களானால், சிறியதோ, பெரியதோ !! புத்திசாலித்தனமானதோ, முட்டாள்தனமானதோ !! எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதோ, வேடிக்கை என்று மறுப்பதோ !! எதுவாக இருந்தாலும், உங்களுக்கோ அல்லது நம்மில் யாரவது ஒருவருக்கோ, 'நன்மை பயக்கும்' என்ற நம்பிக்கை மட்டும் இருந்ததென்றால், அதை உடனேயே செயல்படுத்தி விடுங்கள்.

நல்ல நோக்கமும், எப்படியாவது அதை செயல்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் இருந்துவிட்டால் போதும், வெற்றி உங்கள் வசமாகும் என்று சொல்லி இந்தக் கதையை முடிக்கிறேன்.


Check these stories also from APPLEBOX

உங்களது கவனச்சிதறலுக்கு முடிவுகட்ட, இந்தக் கதையைக் கேளுங்கள் 

தங்க மலர் - Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil

தேவையில்லாத சாபத்தைப் பற்றி நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள் 

பயந்த செம்மறி ஆடுகள் - Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்

மந்திர கடிகாரம் - Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil

நீங்கள் நேரத்தின் முக்கியத்தை உணராதவாராக இருந்தால், இந்தக் கதையைக் கேளுங்கள்

நான்கு ரகசியங்கள் - Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil

I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.

If you feel like searching for every Motivational Monday, you can search for it as Applebox By Sabari Motivational Stories, Applebox Motivational Monday, Applebox Motivational Story, Applebox Motivational Stories,Applebox Motivational, Motivational Stories Applebox, Kutty Stories Applebox and Oru Kutty Kadhai Applebox

You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Video in Tamil for Students, Motivational Video in Tamil for College Students, UPSC Motivational Videos in Tamil, Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Kutty Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.

This is the history of street food shops and street food carts. 


Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post