Motivational Story in Tamil | வாழ்த்து அட்டை | Greeting Card

 பலர் என்னிடம், 'நேர்மறை சிந்தனையை எப்படி அதிகரிப்பது ? ' என்று கேட்பார்கள். நேர்மறை சிந்தனை நம்முள் குடிகொள்வது, சாதாரண காரியமல்ல. ஆயினும், அடி மேல் அடி வைத்தால், அம்மியும் நகருமல்லவா ?

அதுபோல, நம் வாழ்வில் நாம் செய்து கொள்ளும் சின்னச் சின்ன மாற்றங்களே, நம்முள் நேர்மறைச் சிந்தனையை அதிகரிக்கச் செய்யும். அந்த மாதிரியான ஒரு சிறிய மாற்றத்தை வலியுறுத்தும் கதையைத் தான், நாம் இன்று பார்க்கப் போகிறோம். 

சமீபத்தில், ஜோ ஜிரார்டு அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தைப் படித்தபோது, அவரிடமிருந்த இந்தவொரு குணம் என்னப் பெரிதும் கவர்ந்தது. அந்தக் குணம் அவருக்கு எப்படி வந்தது என்பதில் சிறிது கற்பனை சேர்த்து, நன்றியுணர்வின் முக்கியத்தை உணர்த்த ஒரு கதையாக எழுதியிருக்கிறேன். 

அது 1960-வது வருடம்.

'ஜோ ஜிரார்டு' என்ற விற்பனைப் பிரதிநிதி, கார் ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஷோரூமில் ஒரு அறிவிப்புப் பலகை உண்டு. அந்த அறிவிப்புப் பலகையில், அந்த வாரத்தில் அதிக கார்களை விற்பனை செய்த பிரதிநிதியின் பெயர் இடம்பெறும்.

'என்றாவது ஒரு நாள், தனது பெயரும் அந்த அறிவிப்புப் பலகையில் இடம் பெற வேண்டும்' என்ற விருப்பம் ஜிரார்டுக்கு இருந்தது. அதற்காக, அவர் கடினமாக உழைத்துக் கொண்டும் இருந்தார். ஆயினும், வெகுநாட்களாக அது நிறைவேறாமலேயே இருந்தது.

காரணம் என்னவெனில், அந்த ஷோரூமிலேயே அவனைவிட அனுபவம் வாய்ந்தவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவனைவிட திறமை வாய்ந்தவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது அவனுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.

இப்படியிருக்கும் நிலையில் ஒரு நாள், தனது முதலாளியை தனிமையில் சந்தித்தான், ஜிரார்டு. அவரிடம், "நான் என்ன செய்தால், அந்த அறிவிப்புப் பலகையில் எனது பெயர் இடம்பெற முடியும் ?" என்று கேட்டார்.

அவரும் சிரித்துக்கொண்டே, "அது ரொம்ப சுலபம். நீ இங்குள்ளவர்களைக் காட்டிலும், அதிக எண்ணிக்கையில் கார்களை விற்றுக்கொடு. தானாகவே உன்னுடைய பெயர், அந்த அறிவிப்புப் பலகையில் இடம்பெற்றுவிடும். ஆனால், அதற்கு நீ கடுமையாக உழைக்க வேண்டும். உனது தனித்தன்மை என்ன என்பதைக் கண்டறிந்து, அதைப் பயன்படுத்த வேண்டும். அதை மட்டும் செய்" என்றார்.

ஜிரார்டு பல நாட்களாக யோசித்துப் பார்த்தார். தன்னுடைய தனித்தன்மை என்ன என்பது அவருக்குப் புலப்படவில்லை. குழப்பம் மட்டுமே மிஞ்சியது.

இப்படியிருக்கும்பொழுது, தனது ஷோ ரூமின் அருகிலிருக்கும் கஃபே ஒன்ருக்குச் சென்றார். அந்தக் கஃபேயில் பல வகையான கலவைகளில், காஃபி கிடைக்கும். நமக்கான கலவையைத் தெளிவாகச் சொன்னால் மட்டுமே, நமது விருப்பப்படி காஃபி கிடைக்கும்.

ஜிரார்டு குழப்பத்தில் இருந்தபடியால், தனது கலவை எது என்பதைச் சொல்லவேயில்லை. மொட்டையாகக் காஃபி என்று மட்டும்தான் சொன்னார். ஆனால், அந்தக் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த வாலிபன், மிகத் துல்லியமாக, இவருக்கு விருப்பமான கலவையைக் கொண்டுவந்து தந்தான்.

இவருக்கோ, ஆச்சரியம் தாங்கவில்லை.

"அதெப்படி, நான் சொல்லாமலேயே உங்களால் எனது விருப்பிக் கலவையை மிகத் துல்லியமாகக் கொண்டுவந்து தர முடிந்தது ?" , என்று அந்த வாலிபனிடம் கேட்டார்.

ஒரு அழகான புன்னகையுடன், அந்த வாலிபன் சொன்னான் "எனக்கு உங்களை நன்றாக நியாபகம் இருக்கிறது. நீங்கள் அவ்வப்போது இந்த கஃபேக்கு வருவீர்கள். எப்போது வந்தாலும், உளப்பூர்வமாக எனக்கு நன்றி சொல்வீர்கள்.

அதிலும் குறிப்பாக, கடந்த வருடம் தேங்க்ஸ் கிவ்விங் டேயின் பொது, எனக்கு ஒரு வாழ்த்து அட்டையையும் கொண்டு வந்து கொடுத்தீர்கள். அதில் உங்கள் கைப்படவும் எழுதியிருந்தீர்கள். அன்றிலிருந்தே, நான் உங்களை ஒரு வாடிக்கையாளராக மட்டுமல்லாது, கொஞ்சம் பெர்சனலாகவும் எடுத்துக் கொண்டேன். அதனால் தான், உங்களது விருப்பக் கலவையை ஞாபகம் வைத்துக்கொண்டேன்" என்று.

அப்பொழுதுதான் ஜிரார்டுக்கு ஞாபகம் வந்தது. தனக்கு இந்த மாதிரி நன்றி சொல்லி வாழ்த்து அட்டை வழங்கும் பழக்கம், பல நாட்களாகவே இருந்ததென்பது. 'நாம் ஏன் இதையே நமது தொழிலில் பயன்படுத்தக் கூடாது ?' , என்று யோசித்தார்.

அதன் பின்பு, அவர் சந்திக்கும் எல்லா வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரியை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொண்டார். அவர் கார் வாங்கிச் சென்ற பின்னர், அவ்வப்போது அவர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவார். அதில் தனது கைப்பட பெர்சனாலாக ஒரு குறுஞ்செய்தியும்கூட இடம்பெறும். இப்படி ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை அந்த வாழ்த்து அட்டை அனுப்பப்படும்.

இதனால், அந்த வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட முறையில், ஜிரார்டு அறிமுகமானார். அவர்களுக்கு வேறு உதவிகள் தேவைப்பட்டாலோ, அவர்களது உறவினர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு கார் வாங்கவேண்டுமென்றாலோ, இந்த ஜிரார்டையே அவர்கள் அணுக ஆரம்பித்தனர். இப்படியாக, கிரார்டின் வாடிக்கையாளர் வட்டம், பெறுக ஆரம்பித்தது.

ஒரு ஷோ ரூமின் அறிவிப்புப் பலகையில் தனது பெயர் இடம்பெறுவதாக அவர் செய்த முயற்சி, அவருக்கு கின்னஸ் சாதனை புத்தகத்திலேயே இடம் வாங்கித் தந்தது.

ஆம், உலகத்திலேயே, மிக அதிகமான கார்களை விற்பனை செய்த சாதனையாளர், இந்த ஜோ ஜிரார்டுதான். ஒரே வருடத்தில், அதிக எண்ணிக்கையில் கார்களை விற்றுக்கொடுத்த சாதனையாளரும், இந்த ஜோ கிரார்டுதான்.

இவர் ஒருமுறை பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அவர்கள் கேட்டார்கள் "உங்கள் வெற்றிக்கு கரணம், நீங்கள் அனுப்பிய அழுது அட்டைகள் தானே ? " , என்று.

அதற்கு அவர் சொன்னார். "இல்லை. அந்த வாழ்த்து அட்டைகள் எனது வெற்றிக்கு காரணமில்லை. அதில் நான் எழுதிய நன்றி என்ற வார்த்தை. அதுதான் எனது வெற்றிக்குக் கரணம்.

ஏனெனின், நான் வெறும் வாய்ச் சொல்லுக்காக அந்த நன்றியைத் தெரியப்படுத்தவில்லை. ஒவ்வொருமுறை 'நன்றி' என்று எழுதும் பொழுதும், உணர்ந்துதான் எழுதினேன். ஒவ்வொரு வாழ்த்து அட்டையை எழுதும்போதும், இறைவன் இந்த ஒரு நபரை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் என்றும், இந்த நபர் மூலமாக இன்னும் நிறைய நபர்களை அறிமுகம் செய்து வைப்பார் என்றும் நம்புவேன்.

அந்த நம்பிக்கை தான் எனக்கு ஒரு பெரிய வாடிக்கையாளர் வட்டத்தைத் தந்தது. அதனால், நன்றி என்ற என்ற உணர்வும், அந்த நன்றி தந்த நம்பிக்கையும் தான் எனது வெற்றிக்குக் காரணம்" , என்று.

நான் முதலில் சொன்னேனல்லவா ?

"அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். நம்முடைய வாழ்வில் நாம் செய்து கொள்ளும் சிறிய மாற்றங்கள் நமக்கு பெரிய முன்னேற்றத்தைத் தரும்" , என்று. அதில் ஒன்றுதான், இந்த நன்றி சொல்லும் பழக்கம்.

அதனால், நன்றி சொல்லும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் இரவுப் பொழுதில், நமக்கு நடந்த ஒரு நல்ல விஷயத்திற்காக, நாம் நன்றி சொல்ல வேண்டும்.

எப்படி, 'உணர்ந்து நன்றி சொன்ன ஜிரார்டுக்கு என்ன தேவை ?' என்பதை அந்த வாலிபன் கொடுத்தானோ, அதுபோலத் தொடர்ந்து நன்றி சொல்லும் நமக்கும், தேவையானதை இறைவனும் இயற்கையும் இந்தப் பிரபஞ்சமும், உணர்ந்து கொண்டு நமக்கு அதைத் தரும்.

"ஆகவே, இந்த நன்றி சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்", என்று சொல்லி இந்த கதையை முடிக்கிறேன்.ஜிரார்டு பல நாட்களாக யோசித்துப் பார்த்தார். தன்னுடைய தனித்தன்மை என்ன என்பது அவருக்குப் புலப்படவில்லை. குழப்பம் மட்டுமே மிஞ்சியது.

"ஆகவே, இந்த நன்றி சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்", என்று சொல்லி இந்த கதையை முடிக்கிறேன்.

1 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post