அனைவருக்கும் வணக்கம் !!
இந்த வருடம் நிறைவுபெறும் இவ்வேளையில், APPLEBOX சேனலின் சார்பாக தமிழார்வலர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இரண்டு விருதுகளை அறிமுகம் செய்கிறேன்.1. தமிழார்வலர்களுக்கான
"எழுத்தாணி"
விருது
2.
தமிழார்வலர்களுக்கான
"தமிழ் வேர்"
விருது
இந்த 2020 வருடத்துக்கான,
தமிழ் வேர் விருதை, முனைவர் திருமதி. மலர்விழி மங்கயற்கரசி அம்மாவிற்கும்
எழுத்தாணி விருதை, எழுத்தாளர் திருமதி. பவள சங்கரி அம்மாவிற்கும் சமர்ப்பிக்கிறேன்.
இந்த 2020 வருடத்துக்கான,
தமிழ் வேர் விருதை, முனைவர் திருமதி. மலர்விழி மங்கயற்கரசி அம்மாவிற்கும்
எழுத்தாணி விருதை, எழுத்தாளர் திருமதி. பவள சங்கரி அம்மாவிற்கும் சமர்ப்பிக்கிறேன்.
மலர்விழி அம்மா,
தமிழ்க் காப்பியங்கள் எளிய மக்களையும் சென்றடைய வேண்டுமென்பதற்காக, நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணி, மிகவும் மகத்தானது. தங்களது படைப்புகளில், தமிழின்மீது மட்டுமல்லாது, இந்தச் சமூகத்தின்மீதும் நீங்கள் வைத்திருக்கும் பற்று, மிக அழகாகத் தெரிகிறது.
உங்கள் எழுத்துக்களில் தென்படும், அழகியல், நேர்மறை சிந்தனைகள் மற்றும் பெண்ணியம் மிகவும் நேர்த்தியாக இருக்கும்.
நமது சேனலுக்காகவும் நீங்கள் தங்கள் படைப்புகளை அளித்தது, உங்கள் பெருந்தன்மையையும் காட்டுகின்றது. அதன் பயனாளிகளின் நன்றியும் பாராட்டுகளும் தங்களையே சேரும்.
பவளசங்கரி அம்மா,
நமது சேனலுக்காகவும் நீங்கள் தங்கள் படைப்புகளை அளித்தது, உங்கள் பெருந்தன்மையையும் காட்டுகின்றது. அதன் பயனாளிகளின் நன்றியும் பாராட்டுகளும் தங்களையே சேரும்.
பவளசங்கரி அம்மா,
நீங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் சங்ககாலம் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள். பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டி, தகவல்கள் செறிந்தவையாக இருக்கும் அந்தக் கட்டுரைகள், மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இந்த வருடம், சங்ககால உணவு சார்பாக தங்களது கட்டுரையின் ஒரு பகுதியை நமது சேனலில் காணொளியாக்கினோம். மேலும், சங்க இலக்கியங்களை அறிந்துகொள்ளவும், அவற்றை எப்படித் தொகுத்துப் படிக்கவேண்டுமெனவும் அறிந்துகொள்ள அது பலருக்கும் தூண்டுகோலாக இருந்தது.
உங்களைப் போன்றோரின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான், நாங்கள் தமிழைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தையும் அடித்தளத்தையும் அமைக்கிறது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, இந்த ஆண்டுக்கான இந்த விருதை உங்களுக்கு அர்பணிப்பதில், APPLEBOX பெருமை கொள்கிறது.

வாழ்த்துக்களும் நன்றிகளும்.
சபரி பரமசிவன்
சபரி பரமசிவன்
Tags:
Awards
கதைகளை
ReplyDeleteஉச்சரிப்போடும் குரல் நயத்தோடும் தாங்கள் கூறும்போது ஆழ்ந்த புலமையுள்ள கதை சொல்லியாகவே மாறியமை நன்று.