
எல்லோருக்கும் வணக்கம்.
இந்த செப்டம்பர் மாதத்தில், ஒரு மகிழ்ச்சியான அறிவிப்போடு நான் உங்களை சந்திக்கிறேன். அதாவது இந்த மாதத்தில் இருந்து நமது சேனலின் சார்பாக ஒரு மின் செய்தி மடல் உங்களுக்கெல்லாம் வழங்கப்படும்.
இப்போது, கீழே ஒரு புத்தகம் போன்று நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா !! அதுதான் நமது செய்தி மடல். அம்புக்குறி போன்று கொடுக்கப்பட்டிருக்கும் ஐகானைப் புரட்டிப் பாருங்கள்.
'என்னடா இது !! வெறும் 4 பக்கத்துக்கு மட்டும் இருக்கிறது' என்று யோசிக்கிறீர்களா ? ஆம், 'செய்தி மடல்' என்பது சுருக்கமான ஒன்றுதான். ஆயினும், அடுத்த மாதத்தில் இருந்து 8 பக்கங்களுக்கு இதை வழங்க முயற்சிக்கிறேன்.
இதில் மொத்தம் பகுதிகள் இருக்கும்
- இந்த மாதம் நான் உங்களுக்கு சொல்ல விரும்பும் குறுஞ்செய்தி
- உங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக நீங்கள் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகத்தின் அறிமுகம்
- உங்கள் சுய முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்க வேண்டிய ஒரு பயிற்சியின் கையேடு
- நீங்கள் வாசித்து மகிழ ஒரு குட்டிக் கதை
- நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகளும் அவற்றின் பதில்களும்
- படத்தைப் பார்த்து பதிலை சொல்லவும் - வேடிக்கையான ஒரு வினாடி வினாப் பகுதி
ஒரு பெரிய புத்தகத்தையோ, நாளிதழையோ வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இந்த ஆறு பக்க செய்தி மடல் வாசிக்கும் உத்வேகத்தை வழங்கும் என்று மனதார நம்புகிறேன்.
ஒவ்வொரு மாதமும் இதற்கான அறிவிப்பை பெற விரும்பினால், கீழே காணப்படும் இணைப்பை பயன்படுத்தி எனது WHATSAPP சேனலிலோ, INSTAGRAM சேனலிலோ இணைந்து கொள்ளுங்கள். இதற்காக எந்த கட்டணமும் நான் வசூலிப்பதில்லை.
LINK for WHATSAPP CHANNEL
LINK for INSTAGRAM CHANNEL
எப்படி !! அடுத்த மாதம் தொடர்ந்து சந்திப்போமா ?
Tags:
tamil newsletter
உங்க கதை செமையா இருக்கு யாழிலினி என்னுடைய favourite
ReplyDelete