வாசிப்பு வட்டத்தின் முதல் சந்திப்பு - APPLEBOX READING CIRCLE


கடந்த OCTOBER 6 அன்று, நமது APPLEBOX சார்பாக ஒரு ஆன்லைன் வாசிப்பு வட்டத்தை ஏற்பாடு செய்திருந்தேன். இதோ, அந்த அனுபவம் எப்படியிருந்தது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

எதற்காக இந்த சந்திப்பு ?

ஒவ்வொரு மாதமும் ஒரு எழுத்தாளரைப் பற்றிப் பேசிப் பகிர்வதே இந்த சந்திப்பின் நோக்கம். இந்த முறை, எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அவரது சிறுகதைகளையும் புத்தகங்களையும் பரிந்துரை செய்து உரையாட ஏற்பாடு செய்தேன்.

அழைப்பு நமது WHATSAPP சேனலில் பகிரப்பட்டது.Click and Join our APPLEBOX WHATSAPP CHANNEL LINK, if you have not done.

50 பேர் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். 35 பேர் கலந்துகொண்டார்கள்.

அதில் பலரும், சரியாக 8:30 மணிக்கு இணைந்து, முழுநேரம் இணைப்பிலிருந்தது மிகச்சிறப்பு. ஒரு முறையான AGENDA இருந்ததால், நிகழ்வும் சீராக நகர்ந்தது.

கதை வாசிப்பு

முதலில், ஒரு எழுத்தாளர் ஒரு வாசகனுக்கு எந்தெந்த முறையில் எல்லாம் அறிமுகமாகிறார் என்பதையும் எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களது சிறுகதைகளை நான் எவ்வாறு வாசிக்கத் தொடங்கினேன் என்பதையும் குறித்து சில நிமிடங்கள் பேசினேன்.

பின்னர், அவரது இணையதளத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்து, அத்தளத்திலிருந்தே 'வெறும் பணம்' என்ற சிறுகதையை வாசித்தோம்.

மிகவும் எளிமையான, உணர்வுப் பூர்வமான அக்கதை எல்லோருடைய மனதையும் தொட்டது. அதில் இடம்பெற்ற 'கோகிலம்' என்னும் கதாபாத்திரம், வாழ்க்கையின் மீதான புரிதலையும், வைராக்கியத்தையும் கற்றுத் தந்ததாகக் கலந்துகொண்டவர்கள் சொன்னார்கள்.


பின்னர், 'உங்கள் மனதை பாதித்த ஒரு இடத்தைப் பற்றிப் பேசுங்கள்' என்று, மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சகோதரர் விக்னேஷ், சகோதரி வைர லட்சுமி, சகோதரர் ராஜா ஆகிய மூவரும், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். மூவருமே, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள், அறத்தின் மீது பற்று கொண்டவர்கள், வாசிப்பு பழக்கம் உடையவர்கள் என்று அறிந்து கொண்டேன். சீக்கிரத்தில், அவர்களை நல்ல பதவியில், நல்ல பொறுப்பில் பார்ப்பேன் என்றும் நம்புகிறேன். மிக்க மகிழ்ச்சி !!

Click and Check Out Writer Shri S. Ramakrishnan's Website


சிறுகதைகளுக்கான பரிந்துரை

அடுத்து, இதே எழுத்தாளரின் வேறு சில கதைகளை நான் அவர்களுக்குப் பரிந்துரை செய்தேன். அவர்களும் எனக்குப் பரிந்துரை செய்தார்கள்.

பரிந்துரை செய்யப்பட்ட கதைகள் பரிந்துரை செய்தவர்
பாங்கிணறு சபரி
உறுப்பசி வேதாபுத்தகங்களுக்கான பரிந்துரை

அடுத்து, எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் இரண்டு புத்தகங்களை நான் அவர்களுக்குப் பரிந்துரை செய்தேன். அவற்றை பரிந்துரை செய்வதற்கான காரணத்தையும் விளக்கினேன்.

புத்தகங்களின் பெயர் - உணவு யுத்தம், மறைக்கப்பட்ட இந்தியாவாசகர்கள் கருத்து

இறுதியாக, இந்நிகழ்வைப் பற்றிய கருத்தைச் சொல்லும்படி மூன்று வாசகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், சகோதரி மீனாட்சி, காயத்ரி, சபரி ஆகியவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் பேச்சிலிருந்தும் வாழ்த்துக்களில் இருந்தும் அவர்களுக்கு என் மீது இருக்கும் அன்பும், கதைகளின் மீது இருக்கும் ஆர்வமும் எனக்கு நன்றாக புரிந்தது.

மட்டுமல்லாது, நான் கேள்வி கேட்ட போதெல்லாம் 'சேட் பாக்ஸில்' அனைவரிடமிருந்தும் பதில் வந்து கொண்டேயிருந்தது. அதன் மூலம், 'எல்லோரும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்' என்று என்னால் புரிந்து கொள்ளவும் முடிந்தது.Click and Join our APPLEBOX WHATSAPP CHANNEL LINK, if you have not done.

ஆக மொத்தத்தில், இந்த நிகழ்வு நல்லபடியாக முடிந்தது. அடுத்த மாதம், அடுத்த நிகழ்வை நடத்துவதற்கான உத்வேகத்தையும் அது தந்தது. கலந்து கொண்டவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம் !! நன்றி, வணக்கம் !!

1 Comments

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post