இது தாங்க நம்ம 'வாசிப்பு வட்டம்' - APPLEBOX READING CIRCLE


எனது வாசகர்கள் அனைவர்க்கும், அன்பான வணக்கங்கள்.

வாசிப்பையும் வாசிப்பவர்களையும் ஒன்றுசேர்க்கும் ஒரு அமைப்பை 'வாசிப்பு வட்டம்' என்று சொல்வார்கள். வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது, அதற்கான துணுக்குகளைத் தருவது, புத்தகங்களைப் பரிந்துரை செய்வது, வாசிப்பவர்களைத் தட்டிக்கொடுத்து மேலும் வாசிக்க ஊக்குவிப்பது - இம்மாதிரியான செயல்பாடுகளோடு இத்தகைய வட்டங்கள் செயல்படும்.

அப்படியொரு வட்டத்தை நமது APPLEBOX வாசகர்களுக்காக ஏற்படுத்த வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை.

தற்போது WHATSAPP-ல் தரப்பட்ட CHANNEL என்னும் அம்சத்தால், சமீபத்தில் அதை செயல்படுத்த முடிந்தது. நீங்கள் இதுவரை நமது WHATSAPP CHANNEL-ல் இணைந்துகொள்ளவில்லை என்றால், கீழே காணும் இணைப்பைப் பயன்படுத்தி இணைந்துகொள்ளுங்கள். இது தொடர்பான அறிவிப்புகளைப் பெறுவதற்கு வசதியாக இருக்கும்.

OUR WHATSAPP CHANNEL LINK

இப்போது இந்த வட்டத்தின் செயல்பாடுகளைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் பார்க்கலாம்.

இந்த வட்டத்தின் செயல்பாடு

வாசிப்பை மேம்படுத்த, எல்லா விதமான முயற்சிகளையும் இந்த வட்டம் முன்னெடுக்கும். இலக்கியங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது படைப்புகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், குழந்தைகளை வாசிக்க வைக்கவும், பல துணுக்குகள் உங்களுக்குத் தரப்படும்.

முதல் படிநிலையாக, சில ஆன்லைன் சந்திப்புகள். (Zoom Meetings)

மாதம் இரண்டு முறை இந்த இணைய சந்திப்புகள் நடைபெறும். ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையும், மூன்றாவது வெள்ளிக்கிழமையும். இரவு 8:30 மணிக்கு.

முதல் வெள்ளிக்கிழமை
"மாதம் ஒரு எழுத்தாளர்" என்ற பகுதி. இது எல்லா வயதினருக்குமானது.
இரண்டாம் வெள்ளிக்கிழமை
"மாதம் ஒரு இலக்கியம்" என்ற பகுதி. இது சிறுவர்களுக்கானது. பெற்றோரும் கூட இணைந்து கொள்ளலாம்.

OUR WHATSAPP CHANNEL LINK

OUR INSTAGRAM CHANNEL LINK

இந்த சந்திப்புகளுக்குக்கான அழைப்பு, நமது WHATSAPP சேனலின் மூலமாகவும், INSTAGRAM சேனலின் மூலமாகவும் அனுப்பப்படும்.

நேரிலும் சந்திக்கலாம்

இது போக, நேரில் சந்திக்கவும் திட்டம் உண்டு. தற்போது நான் வெளிநாட்டில் இருப்பதால், இந்தியா வரும்பொழுது அதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன். இப்போதைக்கு இணைய வழியான சந்திப்புகள் மட்டுமே !!

ஏற்கனவே MISS பண்ணிருந்தா ?

அடடா, ஏற்கனவே நடந்த சந்திப்புகளைத் தவற விட்டுவிட்டீர்களா ? வருத்தம் வேண்டாம். கீழ்க்காணும் பதிவுகளைப் பாருங்கள். மேலோட்டமாக, முக்கியமான விவரங்களை மட்டும் அறிந்து கொள்ளலாம்.

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post