முன்குறிப்பு :
இது உண்மையான நிகழ்வு கிடையாது. தத்துவ அறிஞர் சாக்ரட்டீஸின் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து, நான் புனைந்த சம்பவமும் கதையும்.
AUTHOR OF THE STORY - SABARI PARAMASIVAN
பல வருடங்களுக்கு முன்பு, கிரேக்க நாட்டிலிருந்த ஒரு திராட்சைத் தோட்டத்தில், அந்தீஸ்டீரியா என்ற பண்டிகை கொண்டாடப்பட்டது.
பொதுவாக, இந்த விழா மூன்று நாட்கள் கொண்டாடப்படும். இந்த விழாவின்போது கிரேக்கர்கள், ஒரு பெரிய பீப்பாய் நிறைய பழைமையான திராட்சை ரசத்தை வைத்துக்கொண்டு, எல்லோருக்கும் பரிமாறுவார்கள். ஆடிப்பாடி சந்தோசமாக இருப்பார்கள். வேற்றுமையின்றி, அனைவரும் அந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
இந்த மாதிரியான விழா ஒன்றில், தத்துவ அறிஞர் சாக்ரட்டீசும் கலந்து கொண்டார். அப்பொழுது, அந்த விழாவுக்கு வந்திருத்த சிலர், சாக்ரட்டீசின் பேச்சைக் கேட்க ஆவலாக இருந்தார்கள். அவருடன் பேசி வம்பிழுப்பதில், அவர்களுக்கு அலாதி விருப்பம்.
அதனால், அந்த மூன்றாவது நாளில், உணவ விருந்து, திராட்சை விருந்து, மெல்லிசை விருந்து, என்று ஒவ்வொன்றாக முடிந்ததும், ஒருவர் சாக்ரட்டீசிடம் வந்து, "நீங்கள் தற்போது செய்துகொண்டிருக்கும் ஆராய்ச்சி எதைப் பற்றியது ?" என்று கேட்டார்.
அதற்கு சாக்ரட்டீஸ், "எனது தற்போதைய ஆராய்ச்சி, நட்பைத் பற்றியது" என்று சொல்லவும், தங்களுக்காக அதைப் பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டார்.
அவர்கள் தன்னிடம், வம்பிழுக்கத்தான் இப்படி கேட்கிறார்கள் என்பது சாக்ரட்டீசுக்கும் தெரியும். ஆனாலும், சாக்ரட்டீஸ் தனது கருத்துக்களைப் பேசத் தயங்குவதில்லை. 'இங்கும் பேசவில்லையென்றால், வேறெங்கு பேசுவது ?' என்பது அவர் எண்ணம்.
அதனால், அவரும் எழுந்து நின்றுகொண்டு, "ஆராய்ச்சியைப் பற்றிச் சொல்வதென்ன ? இதோ, காட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டு, புன்னகைத்தார்.
அங்கிருந்தவர்களின் ஆர்வம் அதிகமானது. அவர்களுள் துணுக்கானவர்கள் ஒருவர், "இது நல்லாருக்கே. சரி, அப்படியெனில் காட்டுங்கள்" என்றார்.
உடனே சாக்ரட்டீசும், அங்கிருந்த ஒரு மேசையைக் காட்டி, "இந்த மேசையில் அமர்ந்திருக்கும் இருவரும், இந்த விழாவில்தான் நண்பர்களானார்கள். ஆனால், அடுத்த அந்தீஸ்டீரியா பண்டிகைக்கு முன்பே, இவர்கள் பிரிந்து விடுவார்கள். அது மட்டுமின்றி, இந்த மேசையில் அமர்ந்திருப்பவர்களுள் ஒருவர், அடுத்த அந்தீஸ்டீரியா பண்டிகைக்கு வரும்பொழுது, கடுமையான மன உளைச்சலில் இருப்பார்" என்றார்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டர்கள். சிலர் சாக்ரட்டீஸ்சிடம், "என்ன சாக்ரட்டீஸ், ஆராய்ச்சி, தத்துவம், இதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஜோதிடத்தில் இறங்கிவிட்டீர்கள் போலும் !!" என்று கிண்டல் செய்தார்கள்.
சாக்ரட்டீஸ், எந்த பதிலும் சொல்லாமல், சிரித்துக்கொண்டார்,
அந்தப் பண்டிகையும் முடிந்துவிட்டது. நாட்களும் கடந்து சென்றன,
சரியாக ஒரு வருடத்துக்குப் பிறகு, அதே அந்திஸ்டீரியா பண்டிகை மீண்டும் நடைபெற்றது. சாக்ரட்டீஸ் சொன்னது போல, அன்று அந்த மேசையில் உட்கார்ந்திருந்தவர்கள் இருவரையும், பரம எதிரிகளாகவும், கடுமையான மன உளைச்சலோடும் பார்க்க முடிந்தது.
சாக்ரட்டீசின் கணிப்பு இத்தனைத் துல்லியமாக இருந்ததை நினைத்து, அத்தனை பேருக்கும் வியப்பாக இருந்தது. "சாக்ரட்டீஸ் எப்பொழுது வருவார் ? அவர் கணிப்பின் காரணம் என்னவாக இருக்கும்" என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில், சாக்ரட்டீசும் அங்கு வந்தார். அத்தனை பேரின் முகத்தையும் பார்த்து, அவர்கள் மனதிலிருந்த கேள்வியைப் புரிந்து கொண்டார்.
வழக்கம்போல, எல்லா விருந்துகளும் முடிந்த பிறகு, மேடையில் ஏறிப் பேசத் தொடங்கினார்.
"நான் சிறிது காலமாகவே, எனது ஆராய்ச்சிக்காக, பல நண்பர்களை கவனித்து வருகிறேன். ஒருவகையில், ஒற்றுக் கேட்கிறேன். மன்னிக்கவும். ஆனாலும், அதன்மூலம் தான் என்னால் சில கோட்பாடுகளை வரையறுக்க முடிந்தது. அதையெல்லாம் அடிப்படையாக வைத்துதான், அன்று அந்த கருத்தைச் சொன்னேன். நான் நினைத்தது போலவே, எனது கருத்தும் பொய்க்கவில்லை" , என்றார்.
அங்கிருந்தவர்களின் ஆர்வம், இன்னும் அதிகரித்தது. சாக்ரட்டீஸ், மறுபடியும் தொடர்ந்தார்.
"அன்று, நான் இவர்கள் இருவரையும் நன்கு கவனித்தேன். இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும்போது, அன்றுதான் அவர்கள் நண்பர்களானார்கள் என்பது எனக்குப் புரிந்தது.
அவர்களில் ஒருவர், யரோ ஒருவர் தனக்குச் செய்த அநியாயத்தைச் சொல்லி, தான் பாதிக்கப்பட்ட விதத்தையும் சொன்னார். உடனே, இன்னொரு நபரும் தனது வாழ்க்கையில் அதுபோல் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, தான் பாதிக்கப்பட்டதைப் பகிர்ந்து கொண்டார். அந்தப் பொதுவான சம்பவமானது, இருவருக்குமிடையே ஒரு நட்பை ஏற்படுத்தியது. உணர்ச்சிவசப்பட்டு, என்னவெல்லாமோ பேசிக்கொண்டார்கள்.
இருவருமே, அந்த சம்பவங்களை முழுவதுமாக ஆராயவில்லை. சற்று நேரம் மௌனம் காத்து, 'யார் மீது தவறாக இருக்கும் ?' , என்று யோசிக்கவில்லை. ஏனெனில், இருவருமே உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருந்தார்கள்.
அதன் பின்னரும் கூட, இவர்களின் பேச்சு யாராவது ஒருவரைப் பற்றியும், எதிர்மறையானதாகவுமே இருந்தது.
பொதுவாகவே, நாம் உணர்ச்சிவசப்பட்டோ, மனம் இளகிய நிலையிலோ, ஒருவரிடம் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு, நல்லதொரு நட்பாக வளராது. எதிர்மறையான சிந்தனைகள் வலம் வரும் நட்பு, எதிர்மறையாகவே போய் முடியும். அதை வைத்துதான், இவர்களிருவருடைய நட்பும் நிலைக்காது என்று சொன்னேன்" என்று சொன்னார்.
உடனேயே, அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்துகொண்டு, "இதென்ன வேடிக்கையாக இருக்கிறது சாக்ரடீஸ் ? நண்பர்களிடம் தானே பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்ள முடியும் !! நண்பர்களிடம் தானே வருத்தங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும் !! அவர்கள் அதைத்தானே செய்தார்கள். இதை எப்படி நீங்கள் குற்றம் சொல்லமுடியும் ? இது ஒரு தவறான புரிதல். இதை எங்களுக்கு போதிக்காதீர்கள்" என்றார்.
அதற்கு சாக்ரடீஸ், "அட.. உனது கேள்வியிலேயே, பதிலும் இருக்கிறது. தெரியவில்லையா !!" என்றார்.
அந்த நபர் குழம்பியபடியே விழிக்க, சாக்ரடீஸ் சொன்னார், " நண்பர்களிடம், குறைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். வருத்தங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். மனக்குமுறலை கூடக் கொட்டலாம். ஆனால், குறைகளையும் கவலைகளையும் பகிர்ந்து கொள்வதற்காவே, ஒரு நட்பை உருவாக்கக் கூடாது.
நண்பர்களுக்குள் பிரச்சனைகளையும், கவலைகளையும் பேசிக்கொள்ளலாம். ஆனால், பிரச்சனைகளையும் கவலைகளையும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
அப்படியிருந்தால், அந்த நட்பு நன்மை பயக்காது. இருவருக்கும், தீமையையே கொண்டு வந்து சேர்க்கும்" என்று.
அன்று அங்கிருந்தவர்கள் அனைவருமே, அதை ஒப்புக் கொண்டார்கள்.
அந்த விருந்தில், சாக்ரட்டீஸ் அவர்களுக்குச் சொன்னதையே, இன்று நான் உங்களுக்குத் சொல்கிறேன்.
நண்பர்கள் தான் நமது பலமும், பலவீனமும். அதனால், நட்பில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
புதிய நபர் ஒருவரிடம் பழகும்பொழுது, உங்கள் நட்புக்கு அடிப்படை, நல்ல எண்ணங்களாக இருக்க வேண்டும். மாறாக, நீங்கள் இருவரும் வேறு ஒருவரைப் பற்றிப் பேசிக்கொள்ளும் எதிர்மறையான விடயமோ, பிரச்சனைகளோ, உங்களின் நட்பின் அடிப்படையாக இருக்கக் கூடாது.
அதன் அடிப்படையில் உருவாகும் நட்பு என்பது, உங்களிருவருக்கோ அல்லது வேறு யாரவது ஒருவருக்கோ, நிச்சியமாக தீங்கு விளைவிக்கும். அதனால், நிதானமான நிலையில் யோசித்துவிட்டு, ஒருவரிடம் நட்பு வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வப்போது, 'உங்கள் நட்பு நல்ல பாதையில்தான் செல்கிறதா !! ' என்று ஆராய்ந்து பாருங்கள். உங்கள் நட்பு உங்களை நல்ல பாதையில் செலுத்துவதாகவும், நேர்மறை சிந்தனையோடும் இருக்க வேண்டும். எப்பொழுது பார்த்தாலும் பிரச்னைகளைப் பேசுவதாகவும், பிறரைப் பற்றிப் புறம் பேசுவதாகவும் இருக்கக்கூடாது. இதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நட்பு என்பது ஓர் உன்னதமான உறவு. உன்னதமான உணர்வு. ஆனாலும், நிதானமின்றி, நீங்கள் வைத்துக்கொள்ளும் ஒரே ஒரு தவறான நட்பு, உங்கள் மொத்த நிம்மதியையும் குலைத்துவிடும். அதனால், நட்பில் கவனத்தோடு இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Video in Tamil for Students, UPSC Motivational Videos in Tamil, Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Kutty Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.
Check these stories also from APPLEBOX
Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil
Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil
Alexander Graham Bell - An interesting Motivational Kutty Story in Tamil
Aristotle's Advice to Alexander - An interesting Motivational Kutty Story in Tamil
Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil
History of Youtube - An interesting Motivational Kutty Story in Tamil
A Magic Tree - An interesting Motivational Kutty Story in Tamil
Nike Success Story - An interesting Motivational Kutty Story in Tamil
Fish Curry - An interesting Motivational Kutty Story in Tamil
Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil