Motivational Stories in Tamil | Golden Flower | ஒரு குட்டிக் கதை

AUTHOR OF THIS STORY - SABARI PARAMASIVAN

கிரேக்கத்தில், நிக்கோ என்று ஒரு வாலிபன் இருந்தான். அவன் ஒரு விளையாட்டு வீரன். மிகுந்த விவேகமும், மனா உறுதியும் கொண்டவன்.  

ஒரு நாள், அவன் ஒரு கடற்கரையில் உலவிக் கொண்டிருக்கும்போது, அழகான பெண்ணொருத்தியைக் கண்டான். அவள் ஒரு தேவதையைப் போல, மிகவும் அழகாக இருந்தாள். நிக்கோவிற்கு அவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஆசை வந்தது. உடனேயே, அவளிடம் சென்று தனது விருப்பதைக் கூறினான்.

அவள் சிரித்துக்கொண்டே, "ஓ.. செய்துகொள்ளலாமே.. ஆனால், நான் நீ நினைப்பதுபோல ஒரு சாதாரணப் பெண் கிடையாது. வானுலகத்தைச் சேர்ந்த ஒரு தேவதை. நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால், வானுலகக் கடவுளான யுரேனஸுக்கு ஒரு பரிசு தரவேண்டும்.

எங்களது வானுலகத் தோட்டத்தில், மூன்று இதழ்கள் கொண்ட தங்க மலர் ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் தேடி  எடுத்துவந்து, பரிசாகத் தந்தால் மட்டும்தான், நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு அனுமதி கிடைக்கும்" என்று சொன்னாள்.

"அட.. இவ்வளவுதானா ? அப்படியேனில், நான் தயார். இப்பொழுதே செல்கிறேன்" , என்றான்.

அந்தப் பெண், மறுபடியும் சிரித்துக் கொண்டு, "அது அவ்வளவு எளிதானது கிடையாது. அதற்கெனச் சில நிபந்தனைகளும் இருக்கின்றன" என்று சொல்லிவிட்டு, சில நிபந்தனைகளைக் கூறினாள்.

அதாவது, அவனிடம் ஒரு சூரியக் கடிகாரம் கொடுக்கப்படும். அந்தக் கடிகாரம் ஒருமுறை சுற்றி முடிப்பதற்குள், அவன் அந்த மலரைக் கண்டுபிடித்துக் கொண்டுவர வேண்டும். ஒருமுறை தோற்றுவிட்டால், இன்னொரு வாய்ப்பு ஒருக்காலும் வழங்கப்படாது.

நிக்கோவிற்கு அது ஒரு  சாதாரண நிபந்தனையாகவே தோன்றியது. அதை ஏற்றுக்கொண்டு, அந்தத் தோட்டத்திற்குச் செல்லத் தயாரானான்.

அந்த தேவதையும் தனது கையை வானத்தை நோக்கி நீட்ட, வானம் திறந்துகொண்டது. அதில் தெரிந்த படிக்கட்டுகள் வழியாக ஏறிப்போனான், நிக்கோ.

அவன் எதிர்பார்த்ததைவிட, மிகவும் அழகாக இருந்தது அந்தத் தோட்டம். அங்கே நிறைய மலர்கள் இருந்தன. பல நிறங்களிலான மலர்கள். பல விதங்களிலான மலர்கள். நிக்கோவிற்கு, அதில் ஒரு மலரைக் கொய்துபார்க்க வேண்டுமென்று தோன்றியது. ஒரு மலரைக் கொய்து, நுகர்ந்து பார்த்தான். மெய்மறந்து போனான்.

ஆனால், அடுத்த சில நொடிகளில், தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு, மறுபடியும் அந்த தங்க மலரைத் தேட ஆரம்பித்தான். அப்பொழுது ஒரு மென்மையான யாழிசை கேட்டது. மறுபடியும், சிலிர்த்துப்போனான் நிக்கோ.

ஆனாலும், சுதாரித்துக் கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தான். மூன்று இதழ்கள் கொண்ட அந்தத் தங்க மலரைத் தேடிக்கொண்டே இருந்தான். 

To watch it as a motivational video in tamil, please watch APPLEBOX By SABARI


யுரேனஸ் கடவுளுடைய சீடர்களெல்லாம் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால், இதுவரையில் யாருமே அந்தப் போட்டியில் வெற்றிபெற்றது இல்லை. அந்தத் தோட்டத்தின் அழகில் மெய்சிலிர்த்து, தங்களை அதில் தொலைத்து, தோற்று விடுவார்கள்.

கடைசியாக, அந்த சூரியக் கடிகாரத்தில் வெறும் முப்பதே வினாடிகள் மிச்சமிருந்த நிலையில், மூன்றே இதழ்கள் கொண்ட அந்த மலரைக் கண்டுபிடித்துவிட்டு, வெற்றிப் படிக்கட்டுகள் வழியாக வெளியே வந்தான், நிக்கோ.

தான் பறித்த மலரைக் கொண்டுவந்து யுரேனஸ் கடவுளிடம் கொடுக்க, ஆச்சரியத்தோடு ஒரு கேள்வி கேட்டார், யுரேனஸ்.

"இதுவரையிலும், பலர் இந்த மலரைத் தேடி இந்தத் தோட்டத்துக்குள் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் இதன் அழகில் தொலைந்துதான் போயிருக்கிறார்கள். ஒருவர்கூட, தான் வந்த காரியத்தில் கவனமாயிருந்ததில்லை. நீ மட்டும் எப்படி உனது காரியத்தில் கவனமாக இருந்தாய் ?" 

அவர் கேட்டுமுடிக்க, சிரித்துக்கொண்டே தனது கைகளைக் காட்டினான், நிக்கோ. 

அவனது கரத்தில், தங்க மலர் ஒன்று வரையப்பட்டிருந்தது. 

இப்பொழுது நிக்கோ சொன்னான், "சிறுவயதிலிருந்தே, எனது தந்தை எனக்கு ஒரு பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அதன்படி, எனது இலக்கைப் பற்றிய குறியீடு ஒன்றை நான் எப்பொழுதும் என்னுடன் வைத்துக்கொள்வேன். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அந்தக் குறியீட்டைப் பார்த்துக்கொள்வேன். 

இன்றும்கூட, என்னை அறியாமலேயே நான் அந்தக் குறியீட்டை அவ்வப்போது பார்த்துக் கொண்டேன். அந்தத் தோட்டத்தின் அழகில் நான் மயங்கினாலும்கூட, அந்த தங்க மலரைப் பற்றி, இந்தக் குறியீடுதான் ஞாபகப் படுத்தியது. சிறுவயது முதலே, நான் பழகிய இந்தப் பழக்கம் எனக்கு வெற்றியைக் கொடுத்தது" , என்று.

அதைக்கேட்டு வியந்துபோனார், யுரேனஸ். அவனுக்கும் அந்த தேவதைக்கு திருமண செய்துவைத்து, சொர்க்கத்தில் அவனுக்கு அனுமதியும் கொடுத்தார்.

இன்றைக்கு இந்தக் கதையில், தோட்டம் என்று நான் சொன்னது, சமூக வலைத்தளங்கள். இதில், நமக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்கள், பயனுள்ள தகவல்கள் நிறைய இருக்கின்றன. நாம் ஒவ்வொரும் இந்தத் தங்க மலர் போன்று, நமக்குத் தேவையான எதாவது ஒன்றைத் தேடித்தான், இதில் நுழைகிறோம்.

ஆனால், அதன் அழகிலும் மாயத்திலும் தொலைந்து நாம் எதற்காக நுழைந்தோமோ, அதையே மறந்து விடுகிறோம். அதற்காக, இவற்றையெல்லாம் அறவே விடுப்பது என்பதும், இன்றிருக்கும் நிலையில் கூடாத காரியம். அப்படியெனில், நாம் என்ன செய்ய வேண்டும் ?

நிக்கோவைப் போல நாமும் ஒரு பயிற்சியைக் கடைபிடிக்க வேண்டும். நாம் எதற்காக அவற்றைப் பயன்படுத்துகிறோம் என்பதை நினைவில் நிறுத்தும் குறியீடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அந்தக் குறியீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை அதைப் பார்க்கும்பொழுதும், நாம் எதற்காக இந்த வலைத்தளத்துக்கும் இருக்கிறோம் என்பதை சிந்தித்துக் கொள்ள வேண்டும். 

அப்படி செய்வதன்மூலம், மிகவும் திறமையாக இந்த வலைத்தளங்களையும் பயன்படுத்திக் கொண்டு, நமது முன்னேற்றத்தையும் உறுதி செய்யமுடியும். 

சமூக வலைத்தளங்களை திறமையோடு கையாள இந்தக் கதை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். 


I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories. If you feel like searching for every Motivational Monday, you can search for it as Applebox By Sabari Motivational Stories, Applebox Motivational Monday, Applebox Motivational Story, Applebox Motivational Stories, Motivational Stories Applebox, Kutty Stories Applebox, Oru Kutty Kadhai Applebox and Applebox Motivational

You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Video in Tamil for Students, UPSC Motivational Videos in Tamil, Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Kutty Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.

Check these stories also from APPLEBOX

Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil

Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil

Alexander Graham Bell - An interesting Motivational Kutty Story in Tamil

Aristotle's Advice to Alexander - An interesting Motivational Kutty Story in Tamil

Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil

History of Youtube - An interesting Motivational Kutty Story in Tamil

A Magic Tree - An interesting Motivational Kutty Story in Tamil

Nike Success Story - An interesting Motivational Kutty Story in Tamil

Fish Curry - An interesting Motivational Kutty Story in Tamil

Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil

Post a Comment

வாசித்தமைக்கு நன்றி !! தங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவிக்க விரும்பினால், இங்கு பதிவு செய்யலாம்..

Previous Post Next Post