AUTHOR OF THIS STORY - SABARI PARAMASIVAN
1960-ல், அமெரிக்காவில் ஒரு வாலிபன், தான் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்பதில் முனைப்போடு இருந்தான். அவன் ஒரு விளையாட்டு வீரன் என்பதால், அது தொடர்பான பொருளை அடிப்படையாக வைத்து தொழில் தொடங்கவே அவன் பெரிதும் விரும்பினான்.
அன்றைய தேதிக்கு அமெரிக்காவில் அதிக விலைகொண்ட, அதிக எடைகொண்ட, ஜெர்மானிய ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் மட்டுமே கிடைத்தன. அவற்றுக்கு மாற்றாக ஜப்பானிய கம்பெனி ஒன்றின் ஸ்போர்ட்ஸ் ஷூக்களை இறக்குமதி செய்து விற்றால், அந்த வியாபாரம் வெற்றிபெறும் என்று தோன்றியது.
ஒரு நாள், தனது தந்தையிடம் சென்று தனது விருப்பதைக்கூறி உதவி கேட்டான். அவன் தந்தை வெறும் 50 டாலர்களை அவனுக்குக் கடனாகக் கொடுத்தார். அவனது தொழில் வெற்றி பெற்றதும் அதை திருப்பித் தந்துவிடவேண்டும் என்றும் சொன்னார்.
அதை வைத்துக்கொண்டு நிச்சயமாக ஒரு தொழில் தொடங்குவது என்பது அந்த வாலிபனுக்கு நன்றாகத் தெரியும். அவன் பிடித்திருந்தது MBA. படிக்கிற காலத்தில்கூட, தான் தொடங்கவேண்டிய தொழில் சம்பந்தமான ஆராய்ச்சிகள், கட்டுரைகள் என்று அவன் கனவு முழுவதும் அந்தத் வியாபாரம் தொடர்பாகவே இருந்தது.
ஆனால், தொழில் தொடங்க கனவும் திட்டங்களும் மட்டும் போதுமா ? முதலீடுதானே முக்கியம். அந்த சூழ்நிலையில்தான், விளையாட்டில் அவனுக்குக் கோச்சாக இருந்தவரே அவனுடன் சேர்ந்து தொழில் செய்ய தனது விருப்பதைத் தெரிவித்தார். இருவரும் தங்களிடம் இருந்த சேமிப்புகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், 500 டாலர் வந்தது.
ஆயினும், தனது திறமையால் குறைந்த முதலீட்டில் ஜப்பானிலிருந்து தரமான ஸ்போர்ட்ஸ் ஷூக்களை இறக்குமதி செய்தான் இந்த வாலிபன். இப்பொழுது அவற்றை காலணிகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு விற்க வேண்டும். அவனும் அவனது கோச்சுமாக ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினார்கள். எந்தக் கடையும் அதை வாங்கத் தயாராக இல்லை. 'புதிய வரவு. விற்குமோ, இல்லையோ' , என்ற சந்தேகம் அவர்களுக்கு.
இருந்த பணத்தையெல்லாம் சரக்கு வாங்க செலவழித்துவிட்டு, அவற்றை விற்க முடியாது போகும்போது எப்படி இருந்துருக்கும் ? தோற்றுப்போனதாக முடிவு செய்து, மூலையில் உட்கார்ந்திருக்க வேண்டும். அப்படித்தானே ?
ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. யோசித்தான். ஒரு யோசனையும் பிறந்தது. அவனும் அவனது கோச்சும் அவர்களிடமிருந்த ஷூக்களை எல்லாம் தங்களது காரில் ஏற்றுக்கொண்டார்கள்.
விளையாட்டு வீரர்கள் அதிகமான நேரத்தைச் செலவிடும் மைதானங்களுக்கு நேரடியாகச் சென்று, அந்த ஷூக்களையெல்லாம் காரின் டிக்கியில் அழகாக அடுக்கிவைத்து விற்பனைக்காக வைத்தார்கள்.
அந்த வாலிபனால், அவனது பேச்சுதிறமையால், தங்களிடமிருக்கும் பொருளின் மேன்மையை எடுத்துரைக்க முடிந்தது. அவர்களது விற்பனை நன்றாக நடந்தது.
ஒருவேளை கடையை அமைத்து விருப்பனை செய்திருந்தால்கூட இப்படி ஒரு விற்பனை நடந்திருக்காது. நேரடியாகவே மைதானத்துக்குச் சென்று செய்த விற்பனை, லாபத்தைத் தந்தது.
அந்த லாபத்தை முதலீடாக வைத்து, ஸ்போர்ட்ஸ் ஷூக்களுக்கென்றே பிரத்யேகமாக 'ப்ளூ ரிப்பன் ஸ்போர்ட்ஸ்' என்ற கடையை ஆரம்பித்தார்கள்.
ஒரு சில ஆண்டுகள், அந்தக் கடை நன்றாகச் சென்றது.
உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்லவா ? நமக்கு வரும் பிரச்சனைகளை தடைக்கற்களாகப் பார்த்தால், அவை நம்மைத் தடுக்கும். அதே பிரச்னையை படிக்கட்டுகளாகப் பாருங்களேன். அவை நம்மை உயர்த்தி பெரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும்.
அவர்களுக்கும் அப்படி ஒரு பிரச்சனை வந்தது. அந்தப் பிரச்சனையின்பின், சாதுரியமாக யோசித்து, ஒரு ஜப்பானிய கம்பெனியிலிருந்து இறக்குமதி செய்வதை விட்டுவிட்டு, தாங்களே சொந்தமாக ஸ்போர்ட்ஸ் ஷூக்களைத் தயாரிக்க முடிவு செய்தார்கள்.
அந்த கோச் வடிவமைத்த எடைகுறைவான ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் தயாரிக்கப்பட்டன. தங்களுக்கான ஒரு அடையாளத்தோடு விற்பனை செய்யப்பட்டன. 500$ முதலீட்டில், ஒரு காரின் டிக்கியில் வைத்து ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம்தான், இன்று ஆலமரம்போல விஸ்வரூபம் எடுத்து உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பியுள்ள, பிரபல ஸ்போர்ட்ஸ் மெட்டீரியல்ஸ் நிறுவனமான "NIKE"
இவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் பெரியது. நான் சொன்னதெல்லாம் வெறும் 10 சதவிகிதம்தான்.
இன்றும்கூட, இதைப்படித்துக் கொண்டிருக்கும் நீங்களும், இதே மாதிரியான ஆசைகளோடு, கனவுகளோடு இருக்கலாம்.
ஆனாலும், "நம்மிடம் போதுமான தொகை இல்லையே. இதை வைத்துக்கொண்டு மிகச்சிறிய அளவில் தொடங்கினால், நம்மைப் பார்த்து அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் ? நம்மை அவமானப் படுத்துவார்களே !" என்று நினைத்துக்கொண்டு தொடங்காமலோ அல்லது தொடங்கிவிட்டது வருந்திக்கொண்டோகூட இருக்கலாம்.
அப்படி இருந்தீர்களானால், ஒன்றை மட்டும் நினைவில் நிறுத்துங்கள். இந்த உலகத்தில் நீங்கள் அண்ணார்ந்து பார்க்கும் பல நிறுவனங்கள், மிக மிகச் சாதாரணமான துவக்கங்களைக் கொண்டவைகள்தான். அண்ணார்ந்து அதன் உயரத்தைப் பார்க்கும் நீங்கள், குனிந்து அதன் அஸ்திபாரத்தையும் பாருங்கள்.
பல நேரங்களில் நம்மைத் தடுப்பது, இந்த 'அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் ?' என்ற எண்ணம்தான்.
யோசித்துப் பாருங்கள். ஒரு காரின் டிக்கியில் ஷூக்களை எடுத்துக்கொண்டு மைதானம் மைதானமாகச் சுற்றி விற்பது என்பது சுலபமான விஷயமா ? பார்ப்பவர்கள் என்ன மாதிரியான மரியாதை கொடுத்திருப்பார்கள் ?
அதுவும் பில் நைட் அப்போது ஒரு 21 வயது வாலிபன். STANFORD பல்கலைக் கழகத்தில் MBA முடித்த பட்டதாரி. 'இதற்குத்தான் இந்த அளவு படித்தாயா ?' என்று நண்பர்களும், ' உன்னைப் போன்ற பிறரெல்லாம் நல்ல சம்பளத்தில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்களே ! நீ மட்டும் இப்படி வெயிலில் சுற்றவேண்டிய அவசியமென்ன ?' என்று பெற்றோரும் கேட்டிருப்பார்கள் தானே !!
கேள்விகளுக்கு பயந்தால், வெற்றி கிடைக்காது. கேலிக்கும் கிண்டலுக்கும் பயந்தால், வெற்றியை நினைக்கக்கூட முடியாது.
ஒன்று சொல்கிறேன். வெற்றி பெற்றவனுக்கும் தோல்வி அடைந்தவனுக்கும் இந்த வரலாற்றில் இடமுண்டு. கைகட்டி வேடிக்கைப் பார்த்தவனுக்கு கிண்டலும் கேலியும் செய்தவனுக்கு நிச்சயமாக இடம் கிடையாது.
அதனால், அந்த நபர்களுக்கு உங்கள் வெற்றியை நீங்கள் விட்டுவிடாதீர்கள். இது உங்களுக்கான களம். வீழ்ந்தாலும் வாழ்ந்தாலும் உங்கள் வாழ்க்கை. நீங்கள்தான் வாழவேண்டும். உங்கள் முடிவுகளை நீங்கள்தான் எடுக்கவேண்டும். உங்கள் முயற்சிகளை நீங்கள் தான் தொடங்க வேண்டும்.
அப்படி துணிவோடு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இயற்கையின் துணையும் இறைவனின் துணையும் எப்போதும் உடனிருக்கட்டும் என்று சொல்லி, இந்தக் கதையை முடிக்கிறேன். நன்றி.
You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Video in Tamil for Students, UPSC Motivational Videos in Tamil, Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Kutty Stories. ஒரு குட்டிக் கதை is my favorite portion from our channel.
Check these stories also from APPLEBOX
Golden Flower - An interesting Motivational Kutty Story in Tamil
Scared Sheep - An interesting Motivational Kutty Story in Tamil
Alexander Graham Bell - An interesting Motivational Kutty Story in Tamil
Aristotle's Advice to Alexander - An interesting Motivational Kutty Story in Tamil
Magical Watch - An interesting Motivational Kutty Story in Tamil
History of Youtube - An interesting Motivational Kutty Story in Tamil
A Magic Tree - An interesting Motivational Kutty Story in Tamil
Nike Success Story - An interesting Motivational Kutty Story in Tamil
Fish Curry - An interesting Motivational Kutty Story in Tamil
Four Secrets - An interesting Motivational Kutty Story in Tamil